Back
Home » ஆரோக்கியம்
சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க...
Boldsky | 5th Dec, 2019 11:36 AM
 • மத்திய தரைக்கடல் உணவு முறை

  நோர்டிக் உணவு ஒரு ஆரோக்கியமான உணவு முறையாகும். இது மத்திய தரைக்கடல் உணவு வகைகளை நிறையவே கொண்டுள்ளது. இதய நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவாக இது கருதப்படுகிறது. தாவர அடிப்படையிலான உணவுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இரண்டு டயட் முறைகளிலும் பால், முட்டை மற்றும் மீன் போன்ற பொருட்கள் உள்ளன. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சிக்கு இங்கே இடமில்லை. மத்திய தரைக்கடல் டயட் முறையில் பொதுவாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நோர்டிக் உணவு கனோலா மற்றும் ராப்சீட் எண்ணெயைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. மத்திய தரைக்கடல் டயட்க்கும் நோர்டிக் டயட்டுக்கும் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் மத்திய டயட்டில் பருப்பு வகைகளும் , நோர்டிக் உணவில் மீன் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.


 • நோய்களின் ஆபத்து குறைப்பு

  உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி நோர்டிக் டயட் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதில் ஏராளமான நன்மை பயக்கும் கூறுகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, நோர்டிக் டயட் உயர்தர கார்போஹைட்ரேட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: அதாவது தானியங்கள், கொட்டைகள், முழு தானிய ரொட்டி, பார்லி மற்றும் கம்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ள முடியும்.


 • முழு தானியங்கள்

  அமெரிக்காவில் உள்ள ஸ்வீடிஷ் கொழுப்பு மிருதுவான ரொட்டி கொண்ட ஒரு பிரதான உணவாகும். இது பெரும்பாலும் முழு தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. டென்மார்க்கில் ராக்பிரோட் ஒரு பிரபலமான ரொட்டி உணவாகும். இது பார்ப்பதற்கு கருப்பாக புளிப்புச் சுவையுடன் இருக்கும். முழு தானியங்களுடன் தயாரிக்கப்படும் உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை இதயத்தை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.


 • சர்க்கரை நோய்

  இந்த உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால், புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைப்பதாக அதன் தரத்தை WHO நிறுவனம் பாராட்டுகிறது.


 • ஹார்வர்டு ஆராய்ச்சி

  ஹார்வர்டு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் படி, அவுரிநெல்லிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளின் அதிகப்படியான பயன்பாடு எடை இழப்பை ஏற்படுத்துகிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெர்ரி பழங்கள் கெமிக்கலான ஆந்தோசயனின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த நாளங்களை மிகவும் நெகிழ வைக்கின்றன. மேலும், நோர்டிக் உணவில் உள்ள உயர்தர கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நீரிழிவு நோயைக் குறைக்கும் என்று என்சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 • இந்த உணவை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

  நோர்டிக் உணவில் உள்ள பல நன்மை பயக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இந்தியாவில், பாரம்பரிய உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இந்த நோர்டிக் உணவில் சேர்க்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இங்கு நாம் வைத்திருக்கும் பிரதான உணவுக்கு நெருக்கமானவை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நோர்டிக் உணவு ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவை ஊக்குவிக்கிறது. இது எடையைக் கவனிப்பவர்களுக்கு அல்லது ஆரோக்கியமான வாழ்க்கையைப் பார்க்க விரும்புவோருக்கு அவசியமான உணவு முறையாக விளங்குகிறது.
நோர்டிக் டயட் முறைகள் பொதுவாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பின்பற்றப்படும் டயட் முறையாகும். இங்கே கிடைக்கும் உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு இந்த டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும் போது நோர்டிக் உணவில் சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்புகள் மட்டுமே உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் கடல் உணவுகள் இரட்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இது பல ஆரோக்கியமான நன்மைகளையும், ஆரோக்கியமான உணவுகளையும் வழங்குகிறது. அதனால் தான் இந்த நோர்டிக் உணவு ப்ரண்ட்லியான உணவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உணவில் கம்பு, பார்லி, ஓட்ஸ், பெர்ரி மற்றும் பிற பழங்கள் போன்ற முழு தானியங்கள் உள்ளன. மேலும் இந்த உணவில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளும் உள்ளன. சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, ஹில்சா மீன் மற்றும் பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் பட்டாணி ஆகியவைகளும் அடங்கும்.

நோர்டிக் உணவின் தனித்துவமான விஷயம் என்னவென்றால், சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுக்கு ஒருபோதும் இடமில்லை.