Back
Home » ஆரோக்கியம்
வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள்? அப்படின்னா கட்டாயம் இத படிங்க...
Boldsky | 16th Nov, 2019 12:55 PM
 • இசையின் பயன்கள்

  இசை என்பது மனித வாழ்வோடு இணைந்த ஒன்று. உலக கலாச்சாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கியத்துவம் உள்ளது. பண்டைய காலத்தில் தமிழ்மொழியில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றை முத்தமிழ் என்று அழைத்தனர். அந்தளவிற்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இசைக்கும் மருத்துவ உலகிற்கும் கூட இணைப்புள்ளது. இசைக்கு ஒரு விதமான மருத்துவ குணமுண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

  * மூளை ஆரோக்கியம்

  * ஞாபக சக்தி

  * ஒருங்கிணைக்கும் திறன்

  * ஹார்மோன் மாற்றங்கள்

  * மன அழுத்தம் குறையும்

  * புத்துணர்ச்சி பெறுவது

  * மனச்சோர்வு நீங்குவது

  * இதய துடிப்பைச் சீராக்கும்

  * இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

  * மன நலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது

  MOST READ: இந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்... உஷாரா இருங்க...!


 • ஆய்வு கூறுவது

  கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி, மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக வாகனம் ஓட்டுதல் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது இதய நோயாகவும் மாற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , 20 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் அதிக போக்குவரத்தில் வாகனம் ஓட்டுதல் மன அழுத்தத்தையும், முன் அனுபவம் இல்லாத வாகன ஓட்டுநர்களால் கவலையடைவதும் இதய நோய் ஏற்படுவதற்கும் முக்கிய காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  பிரேசிலின் மராலியாவில் உள்ள சாவோ பாலோ மாநில பல்கலைக்கழகம், யுனைடெட் கிங்டமில் உள்ள ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியில் உள்ள பார்மா பல்கலைக்கழகம் ஆகிய பல ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி இவ்வாறு கூறப்படுகிறது.


 • இதய அழுத்தத்தைக் குறைக்கும் இசை

  அடிக்கடி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நீண்ட காலமாக உரிமம் பெற்றவர்கள் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் மன அழுத்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இருக்கிறார்கள். இரு வெவ்வேறு சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். பங்கேற்பாளர்கள் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் 3 கிலோமீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் கடக்க வேண்டும். அப்போது, பங்கேற்பாளர்கள் வாகனம் ஓட்டும்போது காரில் எந்த இசையையும் கேட்கவில்லை.

  மற்றொரு நாளில், அதே இயக்கங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இந்த முறை வாகனம் ஓட்டும்போது பங்கேற்பாளர்கள் இசையைக் கேட்கலாம். ஒவ்வொரு சோதனை நிலையிலும் இதயத்தில் மன அழுத்தத்தின் விளைவை அளவிட, புலனாய்வாவார்கள் பங்கேற்பாளர்களிடம் இதய துடிப்பு மானிட்டர்களை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதியில் வாகனம் ஓட்டும்போது இசையைக் கேட்பது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


 • பல பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கும் இசை

  நோயாளிகள் இசையை கேட்கும்போதும், பாடும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை, 'அல்ஸைமர்' எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல பலன் கொடுப்பதாக அமைகிறது.

  நாம் ரசித்துக் கேட்கும் மெல்லிய இசை, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்குகிறது. பதற்றம் மற்றும் கவலைகளை குறைக்கிறது. இதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு.

  MOST READ: பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை வெறுக்க வைக்கின்றதாம் தெரியுமா?


 • மன அமைதியைக் கொடுக்கும் இசை

  இசையைக் கேட்பவர்களைவிட, அதைக் கற்றுக்கொண்டு இசைப்பவர்களின் மூளையில் சில நல்ல தாக்கங்கள் ஏற்படுகின்றதாக கூறப்படுகிறது. இசையைக் கற்றுக்கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அதை வாசிப்பவர்களின், பாடுபவர்களின் கவனிக்கும் திறன் அதிகமாகிறது.

  ஒருவர் இசைகேட்பதால் அவரின் வாழ்க்கை முறையை, விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்வரை இசை கேட்பது மிக நல்லது. இன்றைய சூழலில் தூக்கமின்மை மிகப் பெரும் பிரச்சனை. எனவே, தூங்குவதற்கு முன்னர் இசையைக் கேட்டால் நிம்மதியான தூக்கம் பெறலாம்.

  உலகை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மட்டும் இல்லையென்றால் எத்தனையோ பேர் இன்று மன அமைதியைத் தொலைத்திருப்பார்கள் என்பது நிதர்சனம்.
பொதுவாக தொலைதூரப் பயணம் செய்வது என்பது அனைவரும் பிடித்த ஒன்று. ஆனால், போக்குவரத்து மிகுந்த இடத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த நேரங்களில் மணிக்கணக்காக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டும். அதுவும் முன் அனுபவம் இல்லாத ஓட்டுநராக இருந்தால் இன்னும் அதிக மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும்.

மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் இறுதியில் இதயத்தைப் பாதிக்கும். இந்த சிக்கலுக்கு ஒரு எளிய தீர்வு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அது வாகனம் ஓட்டும்போது சரியான இசையைக் கேட்பதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக இசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இசைக்கு மயங்காத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.