நம் முன்னோர்கள் வலிமையான நோயெதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாட்கள் எப்படி உயிர் வாழ்ந்தனர் என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணமே அவர்களது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான். மேலும் நம் தாத்தா, பாட்டிமார்கள் தங்களுக்கு வரும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போக்க பலவண்ண மாத்திரைகளைப் பயன்படுத்தாமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைத் தான் அதிகம் பயன்படுத்தினர்.
பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் அந்த பொருட்களை நீரில் ஊற வைத்து உண்பதால், அதன் சக்தி இரட்டிப்பாகி நன்மைகள் அதிகம் கிடைக்குமாம்.
MOST READ: பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா?
இக்கட்டுரையில் அப்படிப்பட்ட சில பொருட்களைக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பொருட்களை நீரில் ஊற வைத்து, நீருடன் அப்பொருளை உட்கொண்டு வாருங்கள். இதனால் நீண்ட நாட்கள் நம் முன்னோர்கள் போன்று ஃபிட்டாக இருக்கலாம்.