Back
Home » ஆரோக்கியம்
பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா?
Boldsky | 19th Oct, 2019 01:34 PM
 • முதல் சில நிமிடங்கள்

  பீர் குடித்த முதல் சில நிமிடங்களில், அது முதலில் வயிற்றை அடைந்து, அங்கிருந்து இரத்த நாளங்களால் உறிஞ்சப்பட்டு, அதன் பின் ஒட்டுமொத்த உடலான மூளை மற்றும் அனைத்து தசைகளுக்கும் பயணிக்கும்.


 • 10 நிமிடங்கள்

  பீர் குடித்த 10 நிமிடங்களில் உடலானது பீரை விஷமாக பார்க்க ஆரம்பித்து, உடலில் இது சேகரிக்க வேண்டியவை அல்ல என்பதை தெரிந்து, விரைவில் அதை உடைதெறிந்து, முடிந்த வரை வேகமாக உடலில் இருந்து வெளியேற்ற முற்படும்.


 • 15 நிமிடங்கள்

  15 நிமிடங்களில் வயிறு குடித்த பீரில் உள்ள உட்பொருட்களை உடைதெறிய முயற்சிக்கும் மற்றும் மதுவை நீக்கும். இந்த தருணத்தில் ஆல்கஹால் டீஹைட்ரோஜீனேஸ் என்னும் நொதியை உற்பத்தி செய்து, ஆல்கஹாலை கெமிக்கலான அசிடல்டிஹைடாக (இந்த கெமிக்கல் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட பொருள். இது தான் மறுநாள் ஹேங்ஓவர் ஏற்படுவதற்கு காரணமாகும்.) மாற்றும்.

  அடுத்து, அந்த அசிடல்டிஹைடு அசிட்டிக் அமிலமாக மாற்றப்படும். இறுதியில் உடலுக்கு ஏற்றவாறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் நீராக மாறும். ஆனால் ஒருவர் அளவுக்கு அதிகமாக பீரைக் குடித்தால், கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போய், பிரச்சனையை சந்திக்க நேரிடும்.


 • 20 நிமிடங்கள்

  ஒருவர் பீர் குடித்தால், பொதுவாக போதைத் தன்மையானது 20 நிமிடங்கள் கழித்து தான் உணரக்கூடும். அதாவது லேசான தலைச் சுற்றல், சந்தோஷமான உணர்வு அல்லது வேறு ஏதேனும் உணர்வுகளை உணரக்கூடும்.


 • 45 நிமிடங்கள்

  பீர் குடித்த 45 முதல் 90 நிமிடங்களுக்குள் தான், ஆல்கஹால் இரத்தத்தில் அதிகமாக கலந்து, போதையின் உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்லும்.


 • 60 நிமிடங்களுக்கு மேல்

  60 நிமிடங்களுக்கு மேல் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் ஆல்கஹாலில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரகங்களை நேரடியாக தொடர்பு கொண்டு, சிறுநீர்ப்பையைத் தாக்கி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுவதோடு, ஒருவேளை அதிகமாக மது அருந்தியிருந்தால் உடல் வறட்சியைக் கூட ஏற்படுத்தும். இந்த நேரத்தில் மது அருந்துவதை நிறுத்தியிருந்தால், தூக்க உணர்வைப் பெறக்கூடும்.


 • 12-24 மணிநேரங்கள்

  போதையில் தூங்கி எழுந்த பின்பு ஹேங்ஓவருக்கான பல அறிகுறிகளான தலைவலி, தலைச்சுற்றல், தாகம், நடுக்கம் போன்றவற்றை சந்திக்கக்கூடும். அதுவும் ஒருவர் அதிகமாக மது அருந்தி, உடல் வறட்சி அடைந்திருந்தால் தான் இம்மாதிரியான அறிகுறிகளை சந்திக்கக்கூடும். மேலும் இந்த நேரத்தில் உடலானது இரத்தத்தில் இன்னும் இருக்கும் அதிகப்படியான மதுவை வெளியேற்ற முயற்சிக்கும்.
மது வகைகளில் பலரும் விரும்பிக் குடிக்கும் ஒன்று தான் பீர். இந்த பீர் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கோதுமை, மக்காச்சோளம் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்பட்டாலும், பொதுவாக மால்ட் பார்லியில் இருந்து பீர் தயாரிக்கப்படுகிறது. உலகில் தண்ணீர் மற்றும் டீ, காபிக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் குடிக்கும் ஓர் பானம் என்றால் அது பீர் தான்.

தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுவதாலோ என்னவோ, பீரிலும் ஒருசில ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதுவும் மிதமான அளவில் பருகினால், உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே பலர் மற்ற மது பானங்களை விட, பீரை அதிகம் விரும்பி குடிக்கின்றனர்.

மேலும் பீர் உடலுக்கு குளிர்ச்சி என்பதால், கோடைக்காலத்தில் பலர் பீரை அடிக்கடி குடிப்பார்கள். பீரும் உடலில் போதை விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் மற்ற மது பானங்களுடன் ஒப்பிடுகையில், இதில் போதை விளைவானது சற்று குறைவு தான். என்ன இருந்தாலும், இதுவும் ஒரு கெட்ட பழக்கம் என்பதை மறக்க வேண்டாம். எதுவானலும் அளவை மீறக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா? அப்ப இத செய்யுங்க...

சரி, இப்போது இந்த பீரைக் குடித்த 24 மணிநேரத்தில் உடலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பது குறித்து காணப்போம்.