உடலில் சுரக்கப்படும் கெமிக்கல்கள் தான் ஹார்மோன்கள். இவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவி புரிகின்றன. ஒருவரது உடலில் ஒரு குறிப்பிட்ட வகையான ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், அது உடலில் பல மாற்றங்களை (பிரச்சனைகளை) வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அதில் குறிப்பிட்ட ஹார்மோன்களில் இடையூறு ஏற்படும் போது, உடலில் சில அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, மெலிந்து காணப்படுவது, முகத்தில் பிம்பிள் வருவது, தலைமுடி உதிர்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இப்படி உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சில இயற்கை வைத்தியங்களின் மூலம் நீக்கலாம். இப்போது இந்த கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்ய உதவும் அற்புத பானம் குறித்து தான்.