உங்கள் வீட்டுச் சமையலறையில் பல மாயாஜாலப் பொருட்கள் நிறைந்திருக்கும் போது, வேறு என்ன வேண்டும்! இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுச் சமையலறையிலும் இருக்கும் பொருட்கள், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் திறன் கொண்டவைகளாகும். நம் அனைவருக்குமே மஞ்சள், மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது தெரியும்.
ஆனால் அந்த மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை நெய்யுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதனால் உடலினுள் நிகழும் மாயங்களோ ஏராளம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய எடுத்துக் கொண்ட ஒரு அருமருந்து என்றால், அது இந்த கலவைகள் தான்.
MOST READ: உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், வாழ்க்கை முறையையும் வாழ்ந்து, இந்த மருந்து கலவையை உட்கொண்டு வந்தால், அன்றாடம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.