Back
Home » ஆரோக்கியம்
காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா?
Boldsky | 17th Oct, 2019 04:27 PM
 • வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

  பல வெற்றிகரமான நபர்கள் நாளை தொடங்கும் போது மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்வது தங்களின் மூளையின் செயலாற்றலை அதிகரிப்பதாக கூறியுள்ளனர். காலையில் சண்டையிடுவது நிச்சயமாக உங்கள் நாள் முழுவதையும் கெடுத்துவிடும், மேலும் நீங்கள் சண்டையிட்டவர் மீது நாள் முழுவதும் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பார்கள். சிறப்பான நாளை இந்த கசப்பான அனுபவம் சிதைத்துவிடும். காலையில் சூழ்நிலைகள் கசப்பானதாக இருந்தால், அமைதியாக இருக்க முயற்சி செய்து அனைவரின் மனநிலையையும் பாதிப்பதைத் தடுக்க முயற்சி செய்யுங்கள். இதில் கூடுதல் நன்மை என்னவென்றால், பிரச்சினையில் தர்க்கரீதியாக சிந்திக்கவும், செயல்படவும் உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.


 • காபி குடிப்பது

  இது பெரும்பாலானோர் கடைபிடிக்கும் ஒரு பழக்கமாகும். காலையில் காபி குடிப்பதை நாம் விரும்புகிறோம், ஏனென்றால் அது நம் மனநிலையை சரியாக அமைத்து, ஆற்றலை அதிகரிக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மருத்துவர்கள் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளனர். இந்த பழக்கம் கார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் தூண்டுதலை அதிகரிக்கக்கூடும், இது உடனடியாகவோ அல்லது பின்னரோ மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் வெறும் வயிற்றில் காபி குடிப்பது இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்தும். காலை உணவை முடித்துவிட்டு காபி சாப்பிடுவது நல்லது.

  MOST READ: இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா? அப்ப இத பண்ணுங்க...!


 • புகைபிடித்தல்

  சிகரெட் பிடிப்பது என்பது எப்பொழுது பிடித்தாலும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு பழக்கம்தான், அதனை காலை நேரத்தில் செய்யும்போது அதனால் ஏற்படும் அபாயம் இருமடங்கு அதிகரிக்கும். உலகம் முழவதும் நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதற்கு இதுதான் முக்கிய காரணமாகும். புகைபிடிப்பதன் தீமைகள் தெரிந்தாலும் யாரும் புகைபிடிப்பதை நிறுத்துவதாயில்லை. காலையில் எழுந்தவுடன் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் 30 சதவீதம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.


 • மது அருந்துவது

  மதுவால் நமது உடலநலத்தில் ஏற்படும் கோளாறுகளும், பாதிப்புகளும் என்னென்ன நாம் அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும் மதுவுக்கு அடிமையானவர்கள் தினமும் அதனுடன்தான் நாளை தொடங்குகிறார்கள். காலையில் மது குடிக்கும்போது அது உங்கள் தாகத்தை தணிப்பதுடன் உங்கள் உடலில் சில வித்தியாசமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த விளைவு பிடித்து போய்விடுவதால் இதை தொடர்ந்து செய்து விரைவில் மதுவுக்கு அடிமையாக மாறிவிடுகிறோம்.


 • நீண்ட நேரம் தூங்குவது

  உங்கள் உடலுக்கும், மனதுக்கும் இழந்த ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் பெற போதுமான நேரம் தூக்கம் அவசியம். இந்த நேரம் கடந்த பின்னும் சோம்பேறித்தனத்தால் அதிக நேரம் தூங்குவது உங்களை சோம்பாலாகவும், எதிர்மறையாகவும் உணரச்செய்யும். இதற்கு பதிலாக வீட்டைச் சுற்றி நடப்பது, எளிய உடற்பயிற்சிகளை செய்வது, ஆழமாக மூச்சு விடுவது போன்ற செயல்கள் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

  MOST READ: பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...!


 • காரமான காலை உணவு

  8 மணி நேர தூக்கத்திற்கு பிறகு நீங்கள் மீண்டும் சாப்பிடும்போது உங்கள் வயிற்றுக்கு சத்தான உணவுகள் கண்டிப்பாக தேவை. உங்கள் காலை உணவுதான் உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் எரிபொருள் ஆகும். காலை நேரத்தில் எளிதில் செரிமானம் அடையும் உணவுகளை மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக காரம் மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுகளை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது கடுமையான நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இவை உங்கள் செரிமான அமைப்புகளின் செயல்பாட்டைத் தடுக்கும் இறந்த கலோரிகளாகும்.
காலை நேரம் என்பது பொதுவாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரமாகும். அந்த நாளை சிறப்பான நாளாகவும், ஆரோக்கியமான நாளாகவும் மாற்றுவதற்கு உங்களின் காலை நேர பழக்கவழக்கங்கள் ஆரம்ப புள்ளியாக இருக்கும். உடற்பயிற்சி, தியானம், புத்தகங்களைப் படித்தல், நடைபயிற்சி, குடும்பத்துடன் வேடிக்கையான நேரத்தை செலவிடுதல் போன்றவை சிறந்த காலை நேர பழக்கவழக்கங்கள் ஆகும்.

இந்த பழக்கங்கள் உங்களின் ஆரோக்கியத்தை வெகுவாக அதிகரிக்கும். இதற்கு நேர்மாறாக நீங்கள் காலையில் செய்யும் சில செயல்கள் உங்களின் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த செயல்கள் உங்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் நீங்கள் காலையில் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.