Back
Home » ஆரோக்கியம்
உங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...
Boldsky | 3rd Jan, 2020 10:54 AM
 • 20 வயசு இளசுகளுக்கு...

  நம் உடல் பதின்பருவத்திலிருந்து முதிர்வயதுக்கு மாறும் நேரம் தான் இது. இந்த வயசு இளசுகள் பிஸியான வாழ்க்கை முறையில் ஓடுபவர்கள். நிறைய பேர் நைட் ஷிப்ட் என்றெல்லாம் பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த 20 வயதில் அவர்கள் பெரும்பாலும் உடல் நலம் குறித்தோ, உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்தோ கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்காக சில டயட் டிப்ஸ்களை நாங்கள் இங்கே கூறுகிறோம்.


 • டிப்ஸ் #1

  வெளிப்புற கடைகளில் ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடுவதை பெரும்பாலும் நிறுத்தி விடுங்கள். முடிந்தால் வீட்டில் நீங்களே சமைத்து சாப்பிட பழகுங்கள். இது உங்களுக்கு உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.


 • டிப்ஸ் #2

  ஒரு சமச்சீரான உணவை எடு‌த்து‌க் கொள்வது முக்கியம். இது உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் காக்கும். பருவகால மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.


 • டிப்ஸ் #3

  எடுத்துக் கொள்ளும் உணவின் அளவை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகளவில் சாப்பிடும் போது அது உங்கள் உடல் மெட்டபாலிசத்தை மாற்றி எடையை அதிகரிக்கக்கூடும். உங்கள் உடம்பிற்கு தேவையான கலோரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.


 • டிப்ஸ் #4

  தேநீர், காபி, கார்போனேட்டட் பானங்கள், எனர்ஜி பானங்கள் ஆகியவை உடலில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துவதால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.


 • டிப்ஸ் #5

  அன்றாடம் 3 விதமான காய்கறிகள், 2 விதமான பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த காரணமும் இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த உணவுகள் இந்த வயதினருக்கு சரியானதாக இருக்கும்.


 • 30 வயதை அடைந்தவர்களுக்கு...

  30 வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை, அவர்களின் குடும்பம் மற்றும் மக்களைச் சுற்றியே வருகிறது. இதுப்போன்ற வயதில் சமநிலையை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதனால் இவர்கள் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. 30-களில் பெண்கள் தான் அதிகளவு உடல்நல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே இந்த வயதில் முறையான டயட் முறைகளை பின்பற்றுவது நல்லது.


 • டிப்ஸ் #1

  உங்களுக்கான அல்லது உங்கள் குடும்பத்திற்கான ஆரோக்கியமான உணவுப் பட்டியலை தயாரித்து கொள்ளுங்கள்.


 • டிப்ஸ் #2

  அதிகமாக உப்பு பயன்படுத்துவதை தவிருங்கள். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வறுத்த மீன், பதப்படுத்தப்பட்ட உணவு, சைனீஸ் உப்பு போன்ற உணவுகள் வேண்டாம்.


 • டிப்ஸ் #3

  ஃபோலேட் டயட் கண்டிப்பாக பெண்களுக்கு தேவை. குறிப்பாக கர்ப்பமான பெண்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது கருவில் வளரும் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடு தடுக்கப்படும்.


 • டிப்ஸ் #4

  பாலூட்டும் தாய்மார்கள் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகள் மற்றும் முருங்கை கீரையில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன.


 • டிப்ஸ் #5

  முழு தானியங்களை சாப்பிடும் போது, அதிக நார்ச்சத்துகள் சேர்க்கப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உங்கள் உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.


 • 40 வயதை அடைந்தவர்களுக்கு...

  40 வயதை அடைந்தவர்களுக்கு பெரும்பாலும் பரம்பரை தொடர்பான நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், எடை பிரச்சனைகள், பெரும்பாலான மக்களில் தசை வெகுஜன மற்றும் தொப்பை, கொலஸ்ட்ரால் போன்றவை உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த வயதில் ஒவ்வொருவரும் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கான டிப்ஸ்கள் இதோ...


 • டிப்ஸ் #1

  ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரிஷன்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு வயதாவதை தடுக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, குடை மிளகாய், அடர்ந்த பச்சை காய்கறிகள், ஆளி விதைகள், ஊதா முட்டைகோஸ் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


 • டிப்ஸ் #2

  தொப்பை இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்து வாருங்கள். மைதா மாவிற்கு பதிலாக பாப்பரை மாவு, தினை மாவு போன்றவற்றை சேருங்கள். பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி மற்றும் சர்க்கரை போன்றவை வேண்டாம்.


 • டிப்ஸ் #3

  புரோட்டீன் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்.


 • டிப்ஸ் #4

  வைட்டமின் டி3 அளவை பரிசோதித்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு முடி இழப்பு ஏற்படுவதை தடுக்கும்.


 • டிப்ஸ் #5

  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் இது இதய நோய்கள் வருவதை குறைக்கும்.
அப்படி இப்படி என்று புத்தாண்டும் பிறந்துவிட்டது. ஆனால் நிறைய பேருக்கு என்னவோ இன்னும் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பதில்லை. வருடங்கள் ஓட ஓட நம் வயதும் ஏறிக் கொண்டு செல்கிறது என்பதை மறக்கக் கூடாது. அந்தந்த வயதிற்கு ஏற்ற வகையில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நம்மால் எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

மக்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலே போதும் டயட் தான் அவர்களுக்கு தெரிந்த வழி. ஆனால் நாம் பின்பற்றும் டயட் முறைகள் எல்லா வயதினருக்கும் ஏற்றதா? என்று என்றாவது யோசித்ததுண்டா? சொல்லுங்கள். வயதிற்கு ஏற்ற வகையில் டயட் இருப்பது மட்டுமே சிறந்தது. சிலருக்கு சில வகையான உணவு முறைகள் ஒத்துக்கொள்ளும். சில வயதினருக்கு சில உணவுகள் ஒத்துக் கொள்ளாது.

MOST READ: உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த நோயால் அவஸ்தைப்படுவீங்கன்னு சொல்றோம்...

அதனால் தான் இந்த புது வருடப் பிறப்பில் நாங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற டயட் முறைகளை உங்களிடம் வழங்க உள்ளோம். ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையைச் சார்ந்த எட்வினா ராஜ் - மூத்த டயட்டீஷியன் இதற்கான உணவுப் பட்டியலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதன் படி இந்த 2020 ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்ததாக அமையக் கூடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.