Back
Home » ஆரோக்கியம்
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
Boldsky | 13th Dec, 2019 03:25 PM
 • 400 மில்லியன் மக்கள்

  உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் டெங்கு பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.

  MOST READ: கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்...!


 • பாலியல் உறவால் பரவும் டெங்கு

  எடிஸ் வகை கொசு ஒரு நபரை கடித்தால், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 4-6 நாட்கள் ஆகும். அதிக காய்ச்சல், இரும்பல், தொடர்ந்து தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி மற்றும் தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை வழக்கமான அறிகுறிகளாகும். டெங்கு காய்ச்சலால் அனைவரும் பீதியில் இருக்கும் நிலையில், பாலியல் உறவாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று ஸ்பெயினில் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.


 • டெங்கு பாதிப்பு

  ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். ஆனால், அவர் வசித்த இடம் டெங்கு பாதிப்பு இல்லாத பகுதி என்பதால், அவருக்கு டெங்கு காய்ச்சல் எப்படி பரவியது என்று மருத்துவர்கள் குழப்பமடைந்தனர்.


 • பாலியல் உறவு

  எப்படி இவருக்கு டெங்கு காய்ச்சல் பரவியது என்று மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய ஆண் துணையுடன் அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. ஆண் துணை சமீபத்தில் கியூபா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது அவரை டெங்கு வைரஸ் தாக்கியுள்ளது. அதற்கான தாக்கங்கள் அவரது ரத்த மாதிரியிலிருந்துள்ளது.

  MOST READ: 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்... பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


 • விந்தணு மூலம் உறுதி

  மருத்துவர்கள் நோயாளியின் விந்தணுவைப் பற்றிய ஒரு பகுப்பாய்வை மேற்கொண்டபோது, அவர்களுக்கு டெங்கு இருப்பது மட்டுமல்லாமல், கியூபாவிலும் பரவும் அதே வைரஸ் தான் என்பதை வெளிப்படுத்தியது. இதனால், பாலியல் உறவு மூலமாகவும் டெங்கு பரவும் என்பதை உறுதி செய்து மாட்ரிட் பொது சுகாதாரத் துறையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 • முதல் நோயாளி

  மாட்ரிட்டில் உள்ள சுகாதார அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, இது ஐரோப்பாவில் விவரிக்கப்பட்டுள்ள டெங்கு வைரஸின் பாலியல் பரவுதலுக்கான முதல் வழக்கு மற்றும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களில் பதிவான முதல் வழக்கு ஆகும்.


 • தென்கொரியா

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரியாவிலும் பாலியல் உறவு மூலமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக மற்றொரு வழக்குப் பதிவாகியுள்ளது. இங்கு, ஆண்-பெண் பாலியல் உறவு மூலம் பரவியது என்று சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், இது குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

  MOST READ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்...!


 • விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு

  வரும் காலங்களில் ஏடிஸ், ஈஜிப்டி கொசுவின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அடுத்த அறுபது ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக காலநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. டெங்கு உலகளவில் அதிகம் காணப்படும் நோய்களில் ஒன்றாக மாறும் என்று விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.


 • பொதுவான வழிமுறையாக மாற வாய்ப்பில்லை

  ஸ்பெயினின் சுகாதார அதிகாரிகள் டெங்குவை பாலியல் ரீதியாக பரப்புவதாக அறிவித்திருந்தாலும், இது பரவுவதற்கான பொதுவான வழிமுறையாக கருதப்படுவது மிகவும் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்தியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் டெங்கு பரவ பல காரணங்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்த நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் இருப்பதால் கொசு கடித்தல் காரணமாக டெங்கு பரவுவது முதன்மை காரணமாக இருக்கிறது.

  MOST READ:ஆண்களே... உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்...!


 • தமிழகத்தில் டெங்கு

  2017ஆம் ஆண்டு இந்தியாவில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம்தான் முதலிடத்தில் இருந்தது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். அதன்பின்னர், 2018ஆம் ஆண்டில் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட முயற்சியால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்தது.


 • நடப்பாண்டில் டெங்கு நிலை

  இந்தியா முழுவதும் நடப்பாண்டில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதும் இதுவரை 91,457 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டும், 82 பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை 4,800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை கொசுவால் பரவக்கூடியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. டெங்கு காய்ச்சல் என்றாலே எல்லாரும் பயந்து ஓடுவார்கள். ஏனென்றால் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த காய்ச்சலின் அளவு அதிகமாக இருந்தால் மரணம் உறுதி என்பதால் டெங்கு காய்ச்சல் என்றாலே மக்கள் பெரும் அச்சம்கொள்கின்றனர். ஏடிஸ் வகை கொசு கடிப்பதாலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் ஊசியாலும் மற்றும் இரும்பல் மூலம் பரவும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆனால், பாலியல் உறவாலும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாலியல் உறவு கொள்ளும்போது, அது அவர்களுக்கும் டெங்கு காய்ச்சலை பரப்பும் என்பது ஆய்வு மூலமாக ஸ்பெயினில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன்முறையாக தன்பாலின பாலியல் உறவால் டெங்கு காய்ச்சல் பரவியதாக ஸ்பெயின் நாட்டில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.