Back
Home » ஆரோக்கியம்
இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் ஒயிட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Boldsky | 19th Nov, 2019 04:25 PM
  • கனிமச்சத்துக்கள்

    ஒரு டம்ளர் ஒயிட் ஒயினில் 3 சதவீதம் மக்னீசியம் உள்ளது. மக்னீசியம் உடலில் நொதிகளை உற்பத்தி செய்வதற்கான செயல்பாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமான சத்தாகும். மேலும் ஒயிட் ஒயினில் இதர கனிமச்சத்துக்களான கால்சியம், ஜிங்க், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளும் குறைவான அளவில் உள்ளன.


  • கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள்

    ஒயிட் ஒயினில் 2.6 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.1 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் இதில் 3 சதவீதம் ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்ற உடலில் ஆற்றல் உற்பத்திக்கு தேவையானவைகளும் உள்ளன. அதுமட்டுமின்றி ஒயிட் ஒயினில் 3 பி வைட்டமின்களும் அடங்கியுள்ளன.


  • எடை இழப்பு

    ரெட் ஒயினை விட ஒயிட் ஒயினில் கலோரிகள் குறைவு. எனவே ஒயிட் ஒயினை ஒருவர் மிதமான அளவில் பருகி வந்தால், உடல் எடை குறையும். எனவே உங்கள் எடை இழப்பு திட்டத்தில் ஒயிட் ஒயினையும் சேர்த்து, உங்கள் எடை இழப்பு நோக்கத்தை வெற்றிகரமாக அடையுங்கள்.


  • இதயத்திற்கு நல்லது

    ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயின் இரண்டுமே இதயத்திற்கு நல்லது. ஒயிட் ஒயின் இதய நோய்களுக்கு எதிராக பாதுகாப்பளித்து மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும். இதில் போதுமாக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது வெட்ரிகுலார் மீட்டெடுப்பை மேம்படுத்துவதில் நல்லது.


  • புற்றுநோயைத் தடுக்கும்

    ஒயிட் ஒயினில் உள்ள ப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் கொண்டவை. மேலும் ஒயிட் ஒயினில் தைரோசால் மற்றும் ஹைட்ராக்ஸி தைரோசால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், ஒரு டம்ளர் ஒயிட் ஒயினைக் குடியுங்கள்.


  • நல்ல தூக்கம்

    ஒயிட் ஒயின் நரம்புகளை அமைதியடையச் செய்து, நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே நீங்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், தினமும் ஒரு டம்ளர் ஒயிட் ஒயினைக் குடியுங்கள். இதனால் இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். ஒயிட் ஒயின் மனதை அமைதிப்படுத்துவதோடு, ரிலாக்ஸ் அடையச் செய்யும்.


  • நுரையீரலுக்கு நல்லது

    ஒயிட் ஒயின் நுரையீரலுக்கு நல்லது என்பது தெரியுமா? ஒயிட் ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுரையீரல் செயல்பாட்டைப் பராமரிக்க உதவும். இதனால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் அனைத்து வகையான நுரையீரல் நோய்களும் தடுக்கப்படும். ஆனால் அதற்கு ஒயிட் ஒயினை மிதமான அளவில் பருக வேண்டும்.


  • சர்க்கரை நோய்

    ஒயிட் ஒயின் சர்க்கரை நோயைத் தடுக்க உதவும். குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயைத் தடுக்கும். அதுவும் ஒரு டம்ளர் ஒயிட் ஒயினைக் குடித்தால், 30 சதவீதம் சர்க்கரை நோயின் அபாயம் குறையுமாம். ஆகவே ஒயிட் ஒயின் குடிக்க ஆரம்பியுங்கள்.


  • வலிமையான எலும்புகள்

    இது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஒயிட் ஒயின் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதற்கு இதில் உள்ள கனிமச்சத்துக்கள் தான் காரணம். இந்த சத்துக்கள் தான் எலும்புகளுக்கு வலிமையளித்து, எலும்புகளின் அடர்த்தியை ஊக்குவித்து, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.


  • மன அழுத்தம் குறையும்

    ஒயிட் ஒயினிற்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உள்ளது. இதனால் தான் வெளிநாடுகளில் ஒயிட் ஒயின் பிரபலமானதாக உள்ளது. ஒயிட் ஒயின் மன பதற்றம், மோசமான உணர்வு, களைப்பு மற்றும் சோர்வு போன்றவற்றைப் போக்கும். எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், ஒயிட் ஒயினை அவ்வப்போது குடியுங்கள்.

    உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.




மது பானங்களில் ஒயின் ஆரோக்கியமான பானமாக ஆய்வுகள் கூறுகின்றன. நம்மில் பலருக்கும் ரெட் ஒயினின் நன்மைகள் குறித்து தெரியும். ஆனால் ஒயின் வகையைச் சேர்ந்த ஒயிட் ஒயின் குறித்து பலருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே ஒயிட் ஒயின் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லை. ஆனால் இந்த கட்டுரையைப் படித்த பின், நீங்கள் ஒயிட் ஒயினையும் வாங்கி பருகுவீர்கள். ஏனெனில் ரெட் ஒயினைப் போன்றே ஒயிட் ஒயினிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன.

ரெட் ஒயினிற்கும், ஒயிட் ஒயினிற்கும் உள்ள வித்தியாசம், ரெட் ஒயின் சிவப்பு திராட்சையின் தோலுடன் தயாரிக்கப்படுகிறது. ஒயிட் ஒயின் திராட்சையின் தோலை நீக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் பலரும் ரெட் ஒயினில் தான் நன்மைகள் அதிகம் நிரம்பியிருக்கும் என்று நினைக்கலாம். இருப்பினும் ஒயிட் ஒயினிலும் ஆரோக்கியத்தை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளன.

MOST READ: உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

பல நாடுகளில் ஒயிட் ஒயின் மிகவும் பிரபலமான பானம். உங்களுக்கு ஒயிட் ஒயினை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.