இன்று இளம் தலைமுறையினர் முதல் வயதானவர்கள் வரை ஃபிட்டாக இருப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலர் ஜிம் சென்று அங்குள்ள உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சிகளை செய்வார்கள். நீங்களும் அப்படி ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்பவரா? உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? அப்படியானால், இக்கட்டுரை உங்களுக்கானது.
பொதுவாக 40 வயதாகிவிட்டால், ஒருசில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் சில உடற்பயிற்சிகள் எந்த சிரமத்தையும் கொடுக்காதவாறு இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரே பயிற்சிகளை செய்தால், அது ஆரோக்கியத்திற்கு பேரழிவு தரும். வயதாகும் போது மனித உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது வாழ்க்கை முறையிலும், அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவசியம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
MOST READ: உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?
உடற்பயிற்சி ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் ஒருசில உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்தால், அது கடுமையான காயங்களை உண்டாக்கிவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து செய்ய வேண்டும். இப்போது 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத சில உடற்பயிற்சிகளைக் கண்போம்.