பொதுவாக இதய நோய் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் என்று கூறுவதுண்டு. ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாமை, மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறைகளால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதேபோன்று இன்னொரு ஆபத்தான காரணமும் உண்டு. ஆனால் அது பரவலான கவனத்தைப் பெறவில்லை. அது ஒருவர் மேற்கொள்ளும் தொழில்.
ஒரு நபரின் தொழில், இதய நோய் அல்லது பிற இதய நோய் பிரச்சனைகளை உருவாக்கி அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. உதாரணமாக ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், தொழில்துறையை பொருத்தமட்டில் நிர்வாக பதவிகளில் வகிக்கும் நபர்கள் தான் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. தற்போது பெண்களுக்கும் இதய நோய் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. எந்தெந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காணலாம்.