"உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது பழமொழி. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றால் அது உணவு மட்டுமே. ஒவ்வொரு நாட்டு மக்களும் ஏன் ஒரே நாட்டில் வாழும் வெவ்வேறு மாநில மக்களுக்கும் கூட உணவு முறைகளில் வித்தியாசம் இருக்கும். உணவு முறை என்பது பழங்காலந்தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒன்று. தமிழகத்திலும் பழமையான உணவு பழக்கம் என்பது இருந்து வருகிறது. ஆனால், இவர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று சைவ உணவு முறை, மற்றொன்று அசைவ உணவு முறை.
இந்த இரண்டு முறைகளிலும் பெரும்வாரியான மக்கள் இருக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடுவதால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்று சைவ உணவை உட்கொள்கிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் சைவ உணவு முறை உட்கொள்கிறவர்களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். சைவ உணவு முறையால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.