உங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? இதற்காக கடுமையான பயிற்சிகளைத் தேடி கண்டுபிடித்து எடை இழப்பு முறையை முயற்சித்து வருபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது!
ஆரம்ப கட்டத்தில் உங்களுக்கு தேவையான முடிவுகளைக் கொடுத்த கடுமையான எடை இழப்பு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால், திடீரென்று நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் எடை இழப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், நீங்கள் எடை இழப்பு தேக்க நிலையை அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எடை இழப்பு செயல்முறையின் தேவையற்ற கட்டம், அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்கிய பின் கிட்டத்தட்ட அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. இது ஒவ்வொரு முயற்சியையும் வீணாக்குகிறது.
எடை இழப்பு வழக்கத்தை நீங்கள் ஆரம்பித்தவுடன், எடையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. உடல் கலோரிகளை இழப்பதால் உங்கள் உடல் தசைகளில் இருக்கும் கிளைகோஜனை ஆற்றலுக்காக பயன்படுத்துவதால் இது நிகழ்கிறது. மேலும், கிளைகோஜன் உடலில் எரிக்கப்படும் போது தண்ணீரை வெளியிடுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. படிப்படியாக, உடல் உங்கள் வளர்சிதை மாற்றத்தை உகந்ததாக வைத்திருக்க தேவையான தசைகள் மற்றும் கொழுப்பை இழக்கிறது. இந்த காரணிகளின் குறைபாடு மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. இந்த நேரம், நீங்கள் எடை இழப்பு தேக்க நிலை அடைந்து அதிக கலோரிகளை அகற்றுவதை நிறுத்துகிறீர்கள். சில பொதுவான தவறுகளால் நீங்கள் எடை இழப்பு தேக்க நிலையை அடைகிறீர்கள். அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.