பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் பூண்டு. இத்தகைய பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்றவை ஏராளமாக உள்ளது.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
அதற்கு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். குறிப்பாக பூண்டு டீயை தினமும் ஒரு டம்ளர் காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். இக்கட்டுரையில் பூண்டு டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.