Back
Home » ஆரோக்கியம்
கட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா?
Boldsky | 9th Nov, 2019 11:37 AM
 • ஏன் பசி இந்த மாதிரியான குமட்டலை உண்டாக்குகிறது என்று யோசித்தீர்களா?

  குமட்டல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் நாம் சாப்பிடும் உணவை உடைக்க வயிற்றினுள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆகிறது. இப்படி உடைக்கப்பட்ட உணவு பிறகு ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த ஆற்றல் தான் உடம்பிற்கு செலவழிக்கப்படுகிறது. இந்த நீண்ட செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பொழுது நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாத சமயத்தில் வெறும் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆக ஆரம்பித்து விடுகிறது. இப்படி உற்பத்தியான அமிலம் நம்முடைய உணவுப் குழாய் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களித்தலை உண்டாக்கும். இதனால் நெஞ்செரிச்சல், குமட்டல் போன்றவை ஏற்படுகிறது.


 • மற்றொரு ஆய்வு

  இரண்டாவதாக ஆய்வுகள் என்ன கூறுகிறது என்றால் குமட்டல் ஆனது உங்களுக்கு பசி ஏற்படுகிறது என்பதை தெரிவிக்கிறது என்கிறது. இது பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி மற்றும் கணையம் ஆகியவற்றை உள்ளடக்கிய எண்ட்டோக்ரைன் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த எண்ட்டோக்ரைன் அமைப்பு இரத்த ஓட்டம் வழியாக ஒரு கெமிக்கல் சிக்னலை ஏற்படுத்துகிறது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் உங்கள் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது, உடனே கெமிக்கல் அளவை சமநிலை செய்யுங்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

  இப்போது உங்கள் வயிறு உணவை எதிர்பார்க்கும் போது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இதனால் பசி இருக்கும் போது உங்களுக்கு குமட்டல் நேரிடுகிறது. மற்றொரு விதத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நமக்கு கலோரிகள் தேவை. மேலும் நாள் முழுவதும் வேலை செய்யவும் ஆற்றல் தேவை. இதற்காக நமது உடலானது லெப்டின் மற்றும் கிரெலின் என்ற ஹார்மோன்களை எண்ட்டோக்ரைன் அமைப்புக்கு சமிக்ஞைகளாக அனுப்புகிறது.


 • கிரெலின் ஹார்மோன்

  கிரெலின் என்ற ஹார்மோன் நமக்கு பசியை தூண்டுகிறது. இதுவே லெப்டின் என்ற ஹார்மோன் கிரெலின் அளவை குறைத்தல் அதாவது பசியை குறைக்கிறது. எனவே நாம் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு வரும் போது இந்த இரண்டு ஹார்மோன்களும் சமநிலையில் இருக்கும். உணவை எடு‌த்து‌க் கொண்டு விட்டால் இரண்டு ஹார்மோன்களும் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். இதுவே நீங்கள் சாப்பிடத் தவறி விட்டால் கிரெலின் என்ற ஹார்மோன் அளவு அதிகரித்து பசிக்க ஆரம்பித்து விடுகிறது.


 • அதிக அளவு ஹார்மோன் குமட்டலை ஏற்படுத்தும்

  மேற்கூறிய படி சரியான நேரத்தில் சாப்பிடத் தவறினால் அது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவை பாதிக்கும். கிரெலின் அளவு அதிகரிக்கும் போது நிறைய பேருக்கு குமட்டல் உண்டாகிறது. சில பேருக்கு ஹார்மோன் உணர்திறன் அதிகம் இருந்தால் அவர்கள் இந்த குமட்டலை சந்திக்க நேரிடுகிறது.


 • உடலுக்கு தேவையான ஆற்றல்

  சாப்பிடாமல் இருக்கும் போது இரத்த சர்க்கரை அளவு குறைவதால் உடலுக்கு தேவையான ஆற்றலுக்காக அட்ரீனல் சுரப்பி அமைப்பு ஆற்றலை கொட்ட ஆரம்பிக்கும். இதனால் நமது உடல் ஏற்கனவே சேமித்த கிளைகோஜெனை குளுக்கோஸாக ஆற்றலாக மாற்ற முற்படும். இதனாலும் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படக்கூடும். மேலும் இப்படி வெறும் வயிறில் இருப்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தலைவலியை தூண்டுவதற்கு காரணமாக அமைகின்றன.


 • வலியுடன் குமட்டல் வளர்சிதை மாற்ற நோய்க்குறியைக் குறிக்கிறது

  நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளாத போது குமட்டல் வருவது என்பது சாதாரண விஷயம். இதுவே வலியுடன் குமட்டல் வந்தால் அது வளர்சிதை மாற்ற நோய்க்குறியாக இருக்கலாம். இது இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் அபாயத்தை குறிக்கும். வெவ்வேறு வகையான வளர்சிதை மாற்ற நிலைகளான இரத்த அழுத்தம் அதிகரித்தல், உயர் இரத்த சர்க்கரை, மணிக்கட்டை சுற்றி அதிகப்படியான கொழுப்பு மற்றும் ஒழுங்கற்ற கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு போன்றவை நேரும்.

  எனவே இனி மேல் காலை உணவை தவற விடாதீர்கள். நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.
காலையில் அரக்க பரக்க ஆபிஸூக்கு கிளம்பும் போது வயிறார காலை உணவை சாப்பிடுவது என்பது கடினமான காரியம். நிறைய பேர் அந்த நாள் மீட்டிங், புராஜெக்ட் வொர்க் என்று காலை உணவை எடுத்துக் கொள்வதே இல்லை. சரி பிறகு சாப்பிடலாம் என்று நினைக்கும் போது மதிய சாப்பாட்டு நேரமே வந்து விடுகிறது.

இப்படி காலையில் இருந்து பசியிலேயே கிடப்பது உங்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமில சுரப்பை அதிகப்படுத்தி குமட்டலை ஏற்படுத்தி விடும். இது காலை உணவை மட்டுமல்ல மதிய உணவைக் கூட நீங்கள் சரி வர சாப்பிட முடியாமல் செய்து விடும்.