Back
Home » உலக நடப்புகள்
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு அதிகரிக்கும் தெரியுமா?
Boldsky | 23rd Oct, 2019 06:00 AM
  • மேஷம்

    செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரங்களே. நீங்க தைரியமானவங்கள். உங்களோட குடும்ப வாழ்க்கையில இன்னைக்கு சந்தோஷமான நாள். கணவன் மனைவி ரொமான்ஸ் அதிகரிக்கும். உங்க மனைவிக்கு நீங்க தான் உலகத்திலேயே முக்கியமான ஆளாக இருப்பீங்க. உங்க துணையோட நீங்க இன்னைக்கு கேண்டில் லைட் டின்னர் போகலாம். வேலை செய்யும் இடத்தில கவனமாக இருங்க. கூட இருக்கிறவங்க குழி பறிக்கலாம். உங்களுக்கு நிதி நிலைமை இன்னைக்கு சுமார் தான். பணம் முதலீடு செய்ய இன்றைக்கு நல்ல நாள். அதே நேரத்தில் ஆலோசனை பெற்று முதலீடு பண்ணுங்க. உடல் நிலையில கவனமாக இருங்க.

    ராசியான நிறம் : பர்ப்பிள்
    ராசியான எண் : 12
    ராசியான நேரம் : மதியம் 12.45 மாலை 6 மணி

    MOST READ: ஒரு ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!


  • ரிஷபம்

    சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரங்களே. இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள். கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷமாக இருப்பீங்க. புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்க திறமையை நிரூபிப்பீங்க. உங்க குழந்தைகள் விசயத்தில கவனமாக இருங்க. படிப்புல மாணவர்கள் கவனம் மறதி வரும். பண விசயம் அற்புதமாக இருக்கு தன வரவு வரும்.

    அதிர்ஷ்ட நிறம் புளு
    அதிர்ஷ்ட எண் 15
    அதிர்ஷ்ட நேரம் மாலை 4 மணி இரவு 9.20 மணி


  • மிதுனம்

    இன்றைக்கு உங்களுக்கு அற்புதமான நாள். வம்பு வழக்குகள் தீரும். உங்க வேலையை மேலதிகாரிகள் மதிப்பார்கள். வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலைமை சூப்பரக இருக்கும் கணவன் மனைவி உறவு பலப்படும். தம்பதிகள் உற்சாகமாக இருப்பார்கள். உங்க வேலைப்பளு அதிகரிக்கும். உங்க தொழில் பார்ட்டனருடனான பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. உங்களைப்பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தால் அதை சரியாக புரிய வையுங்கள்.

    லக்கி நிறம் மஞ்சள்
    லக்கி நம்பர் 30
    லக்கி நேரம் காலை 11.45 மாலை 6.30

    MOST READ: மது அருந்திய பின் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் எதனால் வலி ஏற்படுகிறது என்று தெரியுமா?


  • கடகம்

    நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலிங்க. உங்களுக்கு சந்தோஷமான நாள், பொருளாதார ரீதியாகவும் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்க முதலீடுக்கு சரியான லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் உங்க உழைப்புக்கு மதிப்பு மரியாதை கூடும். உங்க பெர்சனல் லைப்லயும் நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. சமூகத்தில மதிப்பு மரியாதை கூடும். உங்களுக்கு சம்பள உயர்வோட கூடிய புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்க வாழ்க்கை துணையோட நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. காதல் நினைவுகளும் ரொமான்ஸ் பேச்சுக்களுமாக உங்க துணையை கொண்டாடுவீங்க. உங்க ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பீங்க. உங்க எனர்ஜி இன்னைக்கு வேற லெவல் போங்க.

    ராசியான நிறம் ப்ரௌன்
    ராசியான எண் 7
    ராசியான நேரம் காலை 6.15 மணி காலை 11.30 மணி


  • சிம்மம்

    இன்னைக்கு காலையில கொஞ்சம் டென்சனா இருப்பீங்க. சின்ன சின்ன சண்டைகள் உங்க குடும்ப வாழ்க்கையில் வந்து போகும். வாயை கொடுத்து வம்பில மாட்டிக்காதீங்க. நிதி நிலை அற்புதமாக இருக்கும். உங்க குடும்பத்தோடும், உறவுகளோடும் உற்சாகமாக இருப்பீங்க. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீங்க. காலையில் இருந்த நிலை மாலையில் மாறிவிடும் மனைவியோடு உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். உங்க திட்டங்கள் கடைசி நேரத்தில் மாறி விடும்.

    ராசியான நிறம் ஆரஞ்ச்
    ராசியான எண் 3
    ராசியான நேரம் பிற்பகல் 2.40 மணி மாலை 4 மணி

    MOST READ: ஏன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?


  • கன்னி

    உங்களுக்கு இன்றைக்கு ரொம்ப நல்ல நாள் வேலை பிசினஸ் விசயமாக பயணங்கள் ஏற்படும். அது பாசிட்டிவ் ஆகவே முடியும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிறைய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பண்டிகைக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதே நேரம் உங்க மனைவி உங்க மேல கோபமாகவே இருப்பார். அவரை சமாதானப்படுத்துவது உங்களுக்கு பெரும்பாடாகி விடும். உங்க நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் காதலி அல்லது காதலனுக்கு புரிய வையுங்கள். இன்றைக்கு நீங்க ஏதாவது ஆன்மீக விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவீங்க.

    உங்க ராசியான நிறம் பிங்க்
    ராசியான நம்பர் 2
    ராசியான நேரம் மதியம் 1.30 இரவு 8 மணி


  • துலாம்

    சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்கு இன்றைய தினம் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் சந்தோஷமான நாள். ரொம்ப ரிலாக்ஸ் ஆகவும் சந்தோஷமாகவும் குடும்பத்தோடும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவு செய்வீர்கள். உங்க வேலையில ரொம்ப நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் இருப்பீங்க. இன்னைக்கு நீங்க ரொம்ப பேசாதீங்க மவுன விரதம் இருந்தா பிரச்சினையில இருந்து தப்பிக்கலாம். சின்னச் சின்ன உடல் நலக் கோளாறு வரும் அலட்சிய படுத்த வேண்டாம் உடனே கவனிங்க. கொழுப்பு உணவுகளை சாப்பிடாம தவிர்த்து விடுங்க.

    ராசியான நிறம் ப்ளூ
    ராசியான எண் 16
    ராசியான நேரம் மதியம் 1.30 பிற்பகல் 3.30 மணி

    MOST READ: ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!


  • விருச்சிகம்

    இந்த நாள் உங்களுக்கு நல்லதும் கெட்டதும் சேர்ந்த நாள். பிசினஸ்ல செய்த முதலீடு திடீர் லாபத்தை தரும் அதே நேரம் உங்க தொழில் பார்ட்டனர் உங்களிடம் சின்ன சந்தேகத்தை கிளப்புவார். உங்க குடும்பத்தில சண்டை சச்சரவுகள் வரும். நீங்க அமைதியா உங்க வேலையை பாருங்க. தொழில் செய்யும் இடத்தில கவனமாக இருங்க உங்க நம்பிக்கை வீண் போகாது. உங்க மன அழுத்தம் போக்கும் நிகழ்வுகள் மண வாழ்க்கையில் நடக்கும். மது போதை பழக்கத்தை விடுங்க. போதையோட வண்டி வாகனம் ஓட்டாதீங்க சிக்கலில் போய் முடியும்.

    ராசியான நிறம் அடர் பச்சை
    ராசியான எண் 24
    ராசியான நேரம் காலை 9 மணி இரவு 8.30 மணி


  • தனுசு

    உங்க சோம்பேறித்தனத்தை விட்டாத்தான் நீங்க ஜெயிக்க முடியும். ஜென்ம சனி ஜெயிக்க விடாமாட்டார் அதையும் மீறி நீங்க உங்க வேலையில கவனமாக இருங்க. மாணவர்கள் நிறைய சோதனைகளை சந்திக்கணும் கவனமாக இருங்க. சந்திராஷ்டமம் இருப்பதால ஒருவித மந்தநிலையே இருக்கும் மாலைக்கு பின்னாடி மனநிலையும் உடல் நிலையும் மாறும். நல்லது நடக்க பிரச்சினைகள் தீர கடவுள் வழிபாடு நல்லது. அதிகமான வேலைப்பளு உங்க ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்க மனதில பாசிட்டிவ் எண்ணங்களை கொண்டுவாங்க எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்க. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம் புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினை ஓடி விடும்.

    ராசியான நிறம் வெள்ளை
    ராசியான எண் 8
    ராசியான நேரம் பிற்பகல் 12 மணி இரவு 7 மணி

    MOST READ: இத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா?


  • மகரம்

    இன்றைக்கு நீங்க ரொம்ப எனர்ஜியாக இருப்பீங்க. உங்க திட்டங்கள் வெற்றியடையும். எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். உங்க கிரியேட்டிவ் ஐடியா உங்களுக்கு பண வரவை பெற்றுத்தரும். வேலை தேடுபவர்களுக்கு இன்றைக்கு நல்ல வேலை கிடைக்கும். மறைமுகமாக நிறைய பணவரவு வரும். உங்க காதல் திருமண வாழ்க்கை ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். உங்க காதல் மனைவியை நீங்க சந்தோஷமாக வச்சிக்கங்க. நேர்மையே உங்க வாக்குறுதியை காப்பாற்றும். அடுத்தவரின் மனதை வெல்வீர்கள்.

    ராசியான நிறம் மஞ்சள்
    ராசியான நிறம் 9
    ராசியான நேரம் பிற்பகல் 2 மணி இரவு 7 மணி


  • கும்பம்

    இன்றைக்கு உங்களுக்கு சாதாரணமான நாள்தான். தொழில் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கணும் திடீர் இழப்பு ஏற்படும். நிதி முதலீட்டுகளை கவனமாக கையாளுங்க. உங்க குடும்பம், நண்பாகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. அதுவே உங்க தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்க துணையோட இதயத்தை வெல்வீர்கள். உங்க காதல் துணையோடு ஏதாவது பிரச்சினை என்றாலும் இன்றைக்கு முடிவுக்கு வரும். உங்க ஆரோக்கியத்தை பாதுகாக்க சின்னச் சின்ன உடற்பயிற்சி தேவை. உடம்பை கவனிக்கலைன்னா மனமும் உடம்பும் ரொம்ப வீக் ஆயிரும் கவனம்.

    ராசியான நிறம் மெரூன்
    ராசியான எண் 6
    ராசியான நேரம் காலை 8 மணி பிற்பகல் 2.15 மணி

    MOST READ: நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில இத குடிங்க...


  • மீனம்

    உங்க ராசிக்கு இன்றைக்கு நீங்க பொருளாதார நிலையில கவனம் செலுத்துங்க எதிரிகள் விசயத்தில கவனமாக இருங்க. உடம்பு உடம்பு பிரச்சினை மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும் கவனமாக இருங்க. திடீர் பணவரவு உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். தேவையற்ற விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள். எதிர்காலத்திற்காக பணத்தை சேமியுங்கள். எதிர்காலத்திற்கு பணத்தை சேமியுங்கள். உங்க காதல் உறவுகள் சந்தோஷமாக இருக்க வாழ்க்கை துணை மீது கவனம் செலுத்துங்கள்.

    ராசியான நிறம்: பிங்க்
    ராசியான எண் 32
    ராசியான நேரம் பிற்பகல் 3.30 இரவு 8 மணி




தினசரி ராசி பலன் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி உங்களின் நிதி நிலை வேலை, தொழில் உடல் நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்றைக்கு உங்களின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு ராசியான நிறம், நம்பர், நல்லநேரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். காதல் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம்.