Back
Home » Car News
வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பினால் வீடு தேடி வரும் டாடா ஹாரியர்!
DriveSpark | 23rd Oct, 2019 10:45 AM
  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு துவக்கத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆளுமையான தோற்றம், சிறந்த எஞ்சின் தேர்வு மற்றும் வசதிகளுடன் மிகச் சரியான விலையில் வந்ததால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியது.


  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஹாரியரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே வந்து ஹாரியர் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை டாடா வழங்குகிறது.


  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    இந்த டெஸ்ட் டிரைவ் திட்டத்தை ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க இருக்கிறது டாடா மோட்டார்ஸ். மேலும், ஹாரியர் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவோர், இருந்த இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான விருப்பத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.


  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    இந்த ஆன்லைன் படிவத்தில் வாடிக்கையாளர்களின் முகவரி, டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பும் நாள், நேரம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து கொடுத்தால் போதுமானது. அந்த நேரத்தில், ஹாரியர் எஸ்யூவியானது டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு ஏதுவாக உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்.

    MOST READ:காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம


  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    உங்களுக்கு வசதியான நேரத்தில் வருவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர்தான் வருவார்கள் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

    MOST READ:சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?


  • வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்!

    டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரூ.




விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், டாடா ஹாரியர் காருக்கான புதிய சேவையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.