Back
Home » Car News
புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?
DriveSpark | 23rd Oct, 2019 06:10 PM
 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  இந்தியாவில் வரலாறு காணாத அளவிலான புக்கிங்குகளை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ, எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் பெற்று வருகின்றன.

  ஆனால், இந்திய வாகனச் சந்தையோ நடப்பாண்டு தொடங்கியது முதல் மிகப்பெரிய விற்பனைச் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய மந்த நிலை என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  ஆனால், எம்ஜி மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்கள் நடப்பாண்டில் களமிறங்கி மற்ற ஜம்பவான் நிறுவனங்களுக்கெல்லாம் டஃப் கொடுத்து வருகின்றன.

  இவ்விரு நிறுவனங்களின் இத்தகைய வெற்றிக்கு, இரு கார்களும் யாரும் எதிர்பாராத விலையில், அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது சாதாரண மக்களை மட்டுமின்றி ஒரு சில பிரபலங்களையும் தன் வசம் ஈர்த்துள்ளது.

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  இந்நிலையில், மஹராஷ்டிரா நவ்நிர்மன் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்ரே, கியா செல்டோஸ் காரை இயக்குவது போன்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் காட்சி வாகன உலகின் தலைப்பு செய்திகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

  இந்த கார் அவருக்கு சொந்தமானது என்ற வதந்தி பரவி வந்தநிலையில், அது அவருடைய தொண்டருடையது என தெரியவந்துள்ளது.

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  அந்த வீடியோவில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ராஜ் தாக்ரே காரை இயக்க ஆரம்பி வைத்து தருவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

  சமீபத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி ரக காரை டெலிவரி பெற்ற அவருடைய தொண்டர், முதன் முதலில் ராஜ் தாக்ரே இயக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக, அந்த காரை நேரடியாக ராஜ் தாக்ரேவின் இல்லத்திற்கே வரவழைத்துள்ளார்.

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  பின்னர், அவரின் விருப்பத்திற்கேற்ப ராஜ் தாக்ரேவும், புதிய கியா செல்டோஸ் காரை இயக்குவதற்கான ஆரம்பப் புள்ளியாக காரை ஸ்டார்ட் செய்து கொடுத்துள்ளார்.

  இந்த கார் 5 இருக்கைக் கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. இது அறிமுகத்தின்போதே 32 ஆயிரம் புக்கிங்குளை அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 9.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இறுதி நிலை மாடலுக்கு 16 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  கியா செல்டோஸ் கார் சாலையில் பயணிக்கும்போது அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் வகையில் உடல் மொழியைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, இதன் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புற தோற்றமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், செல்டோஸின் இமாலய வெற்றிக்கு இவையும் ஓர் காரணமாக இருக்கின்றது.

  MOST READ: சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா?

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  அதேபோன்று பாதுகாப்பு அம்சத்திலும் பிரம்மிக்க வைக்கும் இந்த கார் இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றது.

  இதில், கூடுதல் சிறப்பு வசதியாக பிரேக்-ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐசோபிக்ஸ் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளது.

  MOST READ: டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  செல்டோஸ் காரில் மூன்றுவிதமான எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றது. அதில், ஒன்று 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின். இது அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது.

  MOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா?

 • புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா?

  தொடர்ந்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டிலும் செல்டோஸ் கிடைக்கின்றது. அது, 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஐவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன் தொண்டரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக புதிய கியா செல்டோஸ் காரை பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.