Back
Home » வேலைவாய்ப்பு
10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு!
Career India | 22nd Oct, 2019 07:44 PM

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் முன்னதாக 2.30 மணி நேரம் இருந்த நிலையில் தற்போது அது 3 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். இதில் கடந்த காலங்களில் பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசமாக வழங்கப்பட்டு வந்தது.

சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

இந்நிலையில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பொதுத் தேர்வு எழுத மூன்று மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்தினால் பொதுத் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.