Back
Home » உலக நடப்புகள்
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா?
Boldsky | 22nd Oct, 2019 11:42 AM
  • மேஷம்

    இந்த நாள் தடைகள் நீங்கும் வெற்றிகள் கிடைக்கும். காரணம் நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சுகமான அனுபவங்கள் கிடைக்கும். நிலையான வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு நல்லது நடக்கும். லாபம் வரும். பெண்களுக்கு வெளிநாடு யோகம் டி வரும். ஆடை அணிகலன்கள் வாங்கலாம். செவ்வாய்கிழமையான இன்று முருகனை வணங்குங்கள். வீடு நிலம் யோகம் அமையும். திடீர் தனயோகம் உண்டு. விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் நகைகள் வாங்கலாம். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டு. காரியங்கள் நலமாக இன்றைய தினம் உங்களுக்கு ராசியான எண் 9 நிறம் சந்தனம்.


  • ரிஷபம்

    மனோகாரகன் சந்திரன் தைரிய வீரிய ஸ்தானமான முன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் அனுக்கிரகத்தினால் நல்லது நடக்கும். குறைகள் நீங்கும். காரணம் குரு பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. எதிர்பார்த்த லாபம் வரும் வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். புதிய நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும் அதனால் நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்டம் கிடைக்கும். ராசியான எண் 5 ராசியான நிறம் பச்சை


  • மிதுனம்

    இன்றைக்கு உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் காரணம் சந்திரன் தன ஸ்தானத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளார். ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன், புதன் அற்புதங்களை ஏற்படுத்துவார். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன உரசல்கள் ஏற்படும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. நடராஜர் பெருமானை வணங்குங்கள். ஸ்ரீ ராம ஜெயம் எழுத அனைத்து நன்மைகளும் காரிய வெற்றிகளும் கிடைக்கும். தடை தாமதங்கள் நீங்க அன்னதானம் செய்யுங்கள். பாதிப்புகள் நீங்கும். ராசியான எண் 4 ராசியான நிறம் சிவப்பு.


  • கடகம்

    உங்க ராசியில் ராசிநாதன் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சந்திரனால் மனதில் தடுமாற்றம் குழப்பம் ஏற்படும் என்றாலும் வெற்றிகள் கிடைக்கும். பதற்றம் வேண்டாம் நிதானமாக இருங்க. கல்வி முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக தரிசனம் செய்வீர்கள். ஆன்மீக திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். ராசியான எண் 3 ராசியான நிறம் மஞ்சள்.


  • சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான நாள். ராசி நாதன் நீசமான நிலையில் இருந்தாலும் நீச பங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். சகோதர உறவினால் உதவிகள் தேடி வரும். நன்மைகள் பெருகும். தடைகளும் பகைமைகளும் விலகும். அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும். வம்பு வழக்குகள் வேண்டாம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிறு தூர பயணம் வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று நீங்க வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.


  • கன்னி

    ஆதாயமான நாள் உங்களுக்கு நன்மை. உங்களுக்கு உங்க லாப ஸ்தான அதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இது லாபமான நாள். உங்க பாக்ய ஸ்தான அதிபதியும், தன ஸ்தான அதிபதியுமான சுக்கிரன் உங்க தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ராசி அதிபதியும் இணைந்துள்ளார். பேச்சில் கவனம் தேவை காரணம் சூரியன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். சூடான பேச்சுக்கள் வம்பு வழக்குகளை ஏற்படுத்தும். அப்பா உடல் நலனில் அக்கறை தேவை. பணவரவு வரும். பெருமாளை வணங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். சொத்து சுகம் பெருகும். லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள் நல்லது நடக்கும். ராசியான 6. ராசியான நிறம் சந்தன நிறம்.


  • துலாம்

    சந்திரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் விருந்துகளில் ரொம்ப பிசியாக இருப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் உங்க கோபத்தை வெளிக்காட்டாதீர்கள். ராசியில் உஷ்ண கிரகம் இருப்பதால் கவனமாக இருங்கள். கணவன் மனைவி விட்டு கொடுத்து போங்க. மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகும். வியாபாரத்தில் லாபம் வரும். கல்வி, வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வங்கியில் கடன் கிடைக்கும். சுப காரியங்களில் வெற்றி கிடைக்க அனுமனை வணங்குங்கள். ராசியான நிறம் வயலட் நிறம், ராசியான எண் 8.


  • விருச்சிகம்

    சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களின் நீண்ட நாள் குறைகள் விலகும். வெற்றிகள் கிடைக்கும் கல்வி வேலை முயற்சிகள் வெற்றி கிடைக்கும். முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். பொருள் வரவு வரும் மன சங்கடங்கள் விலகும். உடம்பில் சோர்வும் ஒருவித மந்தமும் ஏற்படும். பிடிவாதம் வேண்டாம். குடும்பத்தில் பேச்சுக்களை அதிகம் குறையுங்கள். சண்டை சச்சரவுகள் நீங்கும். ராசியான எண் 6, ராசியான நிறம் நீலம்.


  • தனுசு

    சந்திரன் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வெற்றிகரமான நாள் உற்சாகமாக கொண்டாடுவீர்கள். தோல் நோய்கள் வரும் கவலைகள் விட்டு விலக குல தெய்வத்தை வழிபடுங்கள். நிதானமாக இருங்க முக்கிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். ராசியான நிறம் வெளிர் நீலம் ராசியான எண் 7.


  • மகரம்

    சந்திரன் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி உறவில் குதூகலம் கூடும். செய்யும் வேலையில் சுப செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் வெற்றிகள் தேடி வரும். அம்மாவின் அன்பும் உதவிகளும் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும் புதிய பதவிகள் தேடி வரும். ராசியான எண் 9 ராசியான நிறம் சிவப்பு.


  • கும்பம்

    சந்திரன் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். புதிய உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலைகளை சந்தோஷமாக செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள் என்றாலும் உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளினால் நன்மை உண்டு. வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை காரணம் எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. உங்களின் பழைய கடன்கள் தீரும். காரியங்கள் வெற்றி பெற ராசியான நிறம் மஞ்சள் ராசியான நிறம் 3.


  • மீனம்

    சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த நாள் உங்களுக்கு நல்லது நடக்கும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க நேர்மையாக இருங்க இல்லாவிட்டால் சிக்கல் ஏற்படும். இந்த நாளில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்க வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலையில் கவனமாக இருங்க. மனக்குழப்பம் ஏற்பட்டாலும் சிக்கல் தீரும். ராசியான நிறம் அடர் சிவப்பு ராசியான எண் 9.




தினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. இன்றைய தினம் சந்திரன் கடகம் ராசியில் பயணிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்றைய தினம் பூசம் நட்சத்திரத்திலும் ஆயில்யம் நட்சத்திரத்திலும் சந்திரன் பயணிக்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.

செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த தினம். நவமி திதியும் பூசம் நட்சத்திரமும் வருவது சிறப்பு. இன்றைய தினம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும் என்று பார்க்கலாம்.