Back
Home » Car News
2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!
DriveSpark | 22nd Oct, 2019 07:50 PM
 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதற்கு மின்சார வாகனங்கள்தான் சிறந்த தீர்வு என்று புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், நீண்ட தூர பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லை என்பதே மிகப்பெரிய குறையாக இருப்பதுடன், பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான கால அளவும் வாடிக்கையாளங்களை யோசிக்க வைக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இந்த குறையை போக்குவதற்கும், அதிக பயண தூரத்தை வழங்கும் மின்சார கார்களுக்கான நவீன பேட்டரிகளை உருவாக்குவதற்குமான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது நடைமுறை பயன்பாட்டில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மூலமாக 350 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை மின்சார வாகனங்கள் வழங்குகின்றன.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  ஆனால், இது நடைமுறை பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த சூழலில், ஹைட்ரஜனில் இயங்கும் ஃப்யூவல் செல் மின்சார வாகனங்களை போன்று வாகனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய வகை ஃப்யூவல் செல் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த அந்நாட்டு கடற்படை அதிகாரியும், பொறியாளருமான ட்ரெவோர் ஜாக்சன் உருவாக்கி இருக்கிறார்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இந்த புதிய வகை ஃப்யூவல் செல் தொழில்நுட்பமும் மின்சார வாகனத் தயாரிப்பு துறையில் புதிய புரட்சியை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரது கண்டிபிடிப்பு நிரூபிக்கப்படாத ஒன்று என்று பல முன்னணி கார் நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்புக்கு தடை விதிக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதனையும் தாண்டி இப்போது இவரது கண்டுபிடிப்பானது நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இவர் கண்டுபிடித்துள்ள புதிய ஃப்யூவல் செல் பேட்டரியானது எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி, பஸ், டிரக் மற்றும் விமானங்களில் கூட பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால், இவரது கண்டுபிடிப்பு குறித்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்கு உலக அளவில் பேரார்வம் நிலவுகிறது.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இதுவரை இவரது கண்டுபிடிப்பை தடை செய்வதற்கு கார் நிறுவனங்கள் முயன்று வந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்டின் நிறுவனம் இவரது கண்டுபிடிப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பழமையான ஆஸ்டின் மோட்டார் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தும் உரிமை பெற்றிருக்கும் இந்த நிறுவனத்துடன் ஜாக்சன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

  MOST READ: சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  அத்துடன், வாகனங்களுக்கான புதிய உந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான அவரது ஆராய்ச்சிக்காக 1.08 லட்சம் பவுண்ட் தொகையும் அவருக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, இவரது தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்வதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பல்கலைகழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

  MOST READ: 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இந்த புதிய ஃப்யூவல் செல் தொழில்நுட்பம் குறித்து ஜாக்சன் குறிப்பிடுகையில்," 1960களில் அலுமினியத்தை குறிப்பிட்ட கலவையில் உருவாக்கப்படும் ரசாயனத்தில் மூழ்கடிக்கும்போது, அது காற்றுடன் சேர்ந்து எலெக்ட்ரோலைட் என்று குறிப்பிடப்படும் முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த ரசாயனம் விஷத்தன்மையையும், அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

  MOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா?

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இதனால், இந்த தொழில்நுட்பம் கைவிடப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது நான் புதிய ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறேன். ஆனால், என்னுடைய தொழில்நுட்பத்தில் ரசாயனமானது விஷத்தன்மை இல்லாமல், பாதிப்புகளையும் ஏற்படுத்தாத வகையில் மாற்றங்களை செய்துள்ளேன். ஒருமுறை எலெக்ட்ரோலைட் திரவம் நிரப்பப்பட்ட ஃப்யூவல் செல் பயன்படுத்தினால் 1,500 மைல் (2,414 கிமீ) தூரம் பயணிக்கலாம்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  மேலும், 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட முறையில் தூய அலுமினியத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். தூய அலுமினியம் விலை அதிகம் என்பதாலும் வர்த்தக ரீதியில் அது அதிக பயன்தராத நிலை இருந்தது. தற்போது விலை குறைவான குறைந்த அலுமினியம் கொண்ட உலோகத்தை பயன்படுத்தியும் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளேன்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  சாதாரணமாக கோக் குளிர்பானத்திற்கு பயன்படுத்தப்படும் அலுமினிய புட்டியை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மிகவும் ரகசியமாக வைத்துள்ளேன். விலை மலிவானதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும். இதனை பேட்டரி என்று கூறவதைவிட ஃப்யூவல் செல் என்று குறிப்பிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  தனது புதிய கண்டுபிடிப்பின் செயல் விளக்கத்தின்போது கோக் குளிர்பான புட்டியில் திரவத்தை ஊற்றிவிட்டு, அதில் எலெக்ட்ரோலைட் ரசாயன திரவத்தை ஊற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறையை காண்பித்தார். அது சிறிய அளவில் உந்து சக்தியை ஒரு மாத்ததிற்கு தேவையான அளவு வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனத்தை குடித்துக் காண்பித்து இதில் விஷத்தன்மை இல்லை, வர்த்தக ரீதியில் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இதனிடையே, ஜாக்சனின் புதிய ஃப்யூவல் செல் பேட்டரியை பயன்படுத்தி ஆஸ்டின் நிறுவனம் மூன்று விதமான வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. முதலாவதாக, மூன்றுசக்கர ஆட்டோரிக்ஷாவில் இந்த ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தையும், அடுத்து எலெக்ட்ரிக் பைக்கிலும் பயன்படுத்த உள்ளனர்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் வாகனங்களில் இந்த ஃப்யூவல் செல் பேட்டரியை பயன்படுத்த இருக்கின்றனர். அதாவது, இது ஹைப்ரிட் வாகனங்களை போல ஓட்டுனரின் விருப்பத்தின் பேரில் செலுத்த முடியும். பின்புற ஆக்சில்களில் மின் மோட்டார்களை பொருத்தி, ஃப்யூவல் செல் மூலமாக இயக்க முடியும். இதுபோன்று மாற்றுவதற்கு 3,500 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.3.21 லட்சம்) செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

 • 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

  ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தில் அணு உலை வடிவமைப்புத் துறையில் பணிபுரிந்து பின்னர் இங்கிலாந்து கடற்படையில் நீர்மூழ்கி கப்பல்களில் லெப்டினன்டாக பணிபுரிந்தார். அதன்பிறகு, மீண்டும் மின்சார வாகனங்களுக்கான உந்து சக்தி தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

  Source: Mail Online
செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

2,400 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃப்யூவல் செல் பேட்டரியை இங்கிலாந்து பொறியாளர் ஒருவர் உருவாக்கி அசத்தி இருக்கிறார்.