Back
Home » ஹீரோயின்
ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா
Oneindia | 19th Oct, 2019 08:21 PM
 • எனக்கு ஐடியா கிடையாது

  பெட்ரோமாக்ஸ் திரைப்படம் நான் நடித்த திகில் படங்களில் மிகவும் வித்தியாசமானது. எனக்கு பெரிய அளவில் நகைச்சுவை கலந்த திகில் படங்களில் நடிப்பது என்னுடைய திட்டங்களில் இல்லை என்றாலும், ஆனந்தோ பிரம்மா திரைப்படத்தை பார்த்த பிறகு எனது மனம் மாறியது. எனக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்தி கொண்டேன்.


 • நான் பந்தா பாக்க மாட்டேன்

  இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அதில் நானும் ஒருவர் தான். ஒரு மாற்றத்திற்காக என்னை மையப்படுத்தி இந்த கதை அமைக்கப்படவில்லை. நான் ஒரு போதும் பட்ஜெட், ஸ்டார் நடிகர்கள் என எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. நான் அனைவரையும் சமமாகத் தான் பாவிப்பேன். பெட்ரோமாக்ஸ் படப்பிடிப்பு காலம் மிகவும் அற்புதமாக இருந்தது, என்றார்.


 • நியாயம் செஞ்சிருக்கோம்

  மேலும் ரீமேக் திரைப்படங்களில் நடிப்பது பற்றின அவரது கருத்தை கேட்டதற்கு, ரீமேக் படங்களில் நடிப்பது பற்றி எனக்கு எந்த தயக்கமும் இல்லை, பயமுமில்லை. ரீமேக் படங்கள் என்றால் நிச்சயம் ஒப்பீடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாங்கள் ஒரு கூட்டணியாக இருந்து, ஒரிஜினல் ஸ்கிரிப்டிற்கு நியாயம் செய்துள்ளோம் என்று கூறினார் தமன்னா.


 • கவுண்டமணி சாரின் காமெடி

  படத்தின் டைட்டில் பற்றி தமன்னா கூறுகையில், இந்த பெயர் அர்த்தம் என்னவென்றே எனக்கு தெரியாது. ஆனால் மிகவும் கவர்ச்சியாக இருந்தது, பிறகு தான் அது கவுண்டமணி சாரின் காமெடி என்று எனக்கு தெரிய வந்தது. தமிழ் சினிமாவில் நான் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக இருந்துள்ளேன் என்றால், அதற்கு முக்கிய காரணம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் தான். மேலும் என்னுடைய தன்னம்பிக்கை என்னுடைய மிக பெரிய பலம். அது தான் என்னை இங்கு கொண்டு வந்து இருக்கிறது என்று நான் நினைக்கிறன். மேலும் நான் என் மீது எந்த ஒரு தருணத்திலும் என் மீது அழுத்தம் கொடுத்ததில்லை என்றார்.


 • சிறந்த அனுபவம்

  பாகுபலி போன்ற திரைப்படங்கள் நமது சினிமா மீது இருக்கும் பார்வையை மாற்றியுள்ளது. தற்போது போலே சுடியன் திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக்குடன் படத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டேன். நவாசுதீன் ஒரு சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.


 • ஸ்ரீதேவியா நடிக்கணும்

  இது தவிர விஷாலுடன் ஆக்ஷன் திரைப்படத்திலும், கோபி சந்துடன் ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான திரைப்படத்திலும் நடித்து வருகிறேன். மேலும் பல ஸ்கிரிப்டுகளை கேட்டு வருகிறேன். இருப்பினும் எனக்கு திரையில் நடிகை ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. அவரை நான் என்றுமே ஒரு இளம் பெண்ணாக தான் பார்த்திருக்கிறேன். அவரின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்பட்டால் அதில் நான் ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் என்றார்.


 • எல்லை தாண்டிய படங்கள்

  இந்தி திரையுலகிற்கும் தென்னிந்திய திரையுலகிற்கும் இடையே கலாச்சார வேறுபாடுகள் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தடைகள் இல்லாத எந்த ஒரு கதையாக இருந்தாலும் அதில் நான் நடிக்க விரும்புகிறேன். இன்று அனைவரும் அனைத்து இடங்களிலும் பணிபுரிய வேண்டும் என்று விரும்புகுறார்கள். இது ஒரு நல்ல ஆரோக்கியமான வளர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டும். கே.ஜி.எஃப், சைரா போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் எல்லைகளை தாண்டிவிட்டன என்றார்.


 • நானும் தப்பு செஞ்சிருக்கேன்

  மேலும் என்னுடைய பயணம் ஒரு வெற்றி பயணம் அல்ல. நானும் தவறு செய்தேன். ஆனால் அதன் மூலம் பாடம் கற்று கொண்டேன். வெற்றி மட்டுமே ஒருவருக்கு இலக்கு அல்ல. கடின உழைப்பு இல்லாமல் யாராலும் 100% சாதனை படைக்க முடியாது. நிலைத்தன்மையை முக்கியமானது என்று கூறினார் தமன்னா.

  இன்று இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளும் ஒருவராக இருக்கும் தமன்னா மிகவும் தெளிவாகவும் கொள்கையுடனும் இருப்பது பாராட்டுக்குரியது. அனைவரையும் சமமாக பாவிக்கும் அவரது இந்த உணர்வு அவரை மேலும் மேலும் உச்சிக்கு கொண்டு செல்லும். மிகவும் தன்னடக்கத்துடன் தாழ்மையுடன் இருக்கும் இந்த மங்கைக்கு எங்களது வாழ்த்துக்கள்.
சென்னை: நான் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னுடைய சினிமா பயணம் ஒரு வெற்றிப் பயணம் கிடையாது. நானும் தவறு செய்திருக்கிறேன். ஆனால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டேன். வெற்றி மட்டுமே ஒருவருக்கு இலக்கு அல்ல. கடின உழைப்பு இல்லாமல் யாராலும் 100% சாதனை படைக்க முடியாது. நிலைத்தன்மையை முக்கியமானது என்று வெளிப்படையாக கூறினார் தமன்னா.

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது பெட்ரோமாக்ஸ் திரைப்படம். தெலுங்கில் டாப்ஸீ நடித்து சூப்பர் ஹிட்டான ஆனந்தோ பிரம்மா திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் தான் பெட்ரோமாக்ஸ். அந்த மகிழ்ச்சியில் உற்சாகத்தோடு வலம் வருகிறார் நடிகை தமன்னா பாட்டியா. தனக்குள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வரும் எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதன் மூலம் நான் குளிர்ச்சி அடைவேன் என்கிறார் தமன்னா.

மேலும் அவர் கூறுகையில், என்னுடைய பார்வையில் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமாக இருக்கட்டும், அல்லது தேவி தொகுப்புகளாக இருக்கட்டும், இரண்டுக்குமே என் பார்வையில் ஒரே அளவுகோல் தான். இதே அளவுகோலை தான் நான் பார்வையாளர்களிடமும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

மம்மூட்டி நடிக்கும் வரலாற்று காவியம் மாமாங்கம்-மறைக்கப்பட்ட மாவீரனின் கதை