Back
Home » திரைவிமர்சனம்
அருவம் சினிமா விமர்சனம்: புருவம் உயர்த்த வைக்கும்
Oneindia | 11th Oct, 2019 10:10 AM

சென்னை: சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு பிறகு சித்தார்த் நடித்திருக்கும் ஒரு வித்தியாசமான ஆர்கானிக் பேய் கதை. கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் தான் அருவம். உருவம் இல்லாத ஒன்றை தான் அருவம் என்று சொல்லுவார்கள். அது போலே பல காட்சிகளில் திகில் மாஜிக் காட்டிருக்கிறார் இயக்குனர்.

தமிழில் அழகான நாட்கள், கிரி, தேவதையை கண்டேன், காதல் சொல்ல வந்தேன், திருவிளையாடல் ஆரம்பம், பட்டத்து யானை போன்ற வெற்றி படங்களை இயக்கிய பூபதி பாண்டியனின் உதவி இயக்குநரான சாய் சேகர் தான் அருவம் பட இயக்குநர். அறிமுக இயக்குநரான சாய் சேகர் பூபதி பாண்டியனை போலவே கமர்சியலும் கருத்து கலந்த படத்தை இயக்கியுள்ளார். என்ன புதுசு என்று யார் கேட்டாலும், பேய் கருத்து சொல்லுவது புதுசு தான் என்றார்.

படம் ஆரம்பித்து முதல் காட்சியிலே நமக்கு தெரிந்து விடுகிறது, இது படம் பேய் என்று. ஏனெனில் படத்தின் முன்னோட்டங்களில் எதிலுமே இது பேய் படம் என்று தெரியாதவாரே வெளியிடப்பட்டிருந்தது. படத்தின் கதை, சித்தார்த் உணவு கலப்படங்களை மிக தீவிரமாக எதிர்க்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக படத்தில் நடித்து இருக்கிறார்.

டீ கடையில் இருந்து பலபல உணவு தொழிற்சாலைகள் வரை உணவு கலப்படங்களை எதிர்த்து சீல் வைத்து கொண்டே செல்லும் ஹீரோவிற்கு எதிராக உருவாகும் வில்லன். மறுமுனை ஹீரோயின் நுகரும் திறனற்ற மாற்றுத் திறனாளியாக அறிமுகம் ஆகிறார்.

ஹீரோயினை காதலிக்கும் ஹீரோ, தன் பிரச்சினை உணர்ந்து காதலிப்பதால் கல்யாணத்திற்கு சம்மதிக்கும் கேத்தரின், அந்நேரம் வில்லன் ஹீரோவை கொல்ல சதித்திட்டம், ஹீரோயின் உடம்புக்குள் செல்லும் ஆவி, அது எப்படி வில்லனை பழி வாங்கியது என்று பழைய கருத்தையும் பழைய பல பேய் கதையையும் சேர்த்தது தான் அருவம் படம்.

இந்த கூடு விட்டு கூடு பாயுறது எல்லாம் பழைய பழைய ரொம்ப பழைய காட்சிகள் தான் என்றாலும், இதில் ஹீரோவும் பேய், ஹீரோயினும் பல நேரங்களில் பேய். பேய்க்கும் பேய்க்கும் காதல், வில்லன்களோட மோதல், அட போங்க பாஸ் செம்ம காமெடி பண்றீங்க. இதெல்லாம் பத்தாதுன்னு வெளிநாட்டில் இருந்து வரும் கென்யா டீம் கேப்டன் மாதிரி ஒரு சாமியாரை கொண்டு வந்து பேய் பிடிக்கிறான். பானைக்குள்ள அடைக்கிறேன் அப்படீங்கறதெல்லாம் டூ மட்ச்.

படம் பேய் படம் என்று தெரிந்தவுடன், படம் இப்படி தான் செல்லுமோ என்று நம்மாள் யூகிக்க முடிந்தது. அதற்கு காரணம் வலுவில்லாமல் உருவாக்கப்பட்ட திரைக்கதையே. படத்தில் ஆவி கேத்தரின் உடம்பில் புகுந்தது என்பது, திரைக்கதையில் தாமதமாக சொன்னாலும், அந்த இடத்திலே படத்தின் வேகம் குறைந்து விடுகிறது. சொதப்பலான காட்சிகள், வேலைக்காகாத காமெடி காட்சிகள், சதீஷ் இந்த படத்தில் ரொம்பவே பாவம்.

வழக்கம் போல உள்ள பேய் கதை தான் என்றாலும் கூட, படத்தின் பல இடங்களில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சரியாக பொருந்தாததால் படம் பார்க்கும் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது படம்.

ஸ்மெல்லிங் சென்ஸ் இல்லாத கதாநாயகியை வைத்து ஏதோ புது ஸ்க்ரீன்ப்ளே பண்ணுவார்னு பார்த்தா, அத விட்டுட்டு நல்ல சண்டை போடுற ஹீரோவ தற்கொலை செய்ய வைத்து கன்ஃப்யூஸ் பண்ணி, அடுத்தடுத்த காட்சிகள் இதுதான் என்பதை மிக எளிதாக புரிய வைக்கிறது. புதுமையான கருத்து இருந்தும் படத்தின் திரைக்கதையில் சொதப்பியதால் படம் எல்லாரையும் எவ்வாறு திருப்தி செய்யும் என்பது கேள்வி தான்.

உணவு கலப்படம் என்பது தற்போதைய சூழலில் பேசப்பட வேண்டிய கருத்து தான். அதை சரியாக பேசி இருந்தால் சிறந்த படமாகவே அமைந்திருக்கும் இந்த அருவம். சரியான கருத்தை சொல்லி புருவம் தூக்க வைத்த அருவம். பேய்களின் பருவம் கடந்து வந்ததால் கொஞ்சம் ஆடியன்ஸ் பாவம்.

சித்தார்த் பல பல வித்தியாசமான கதைகள் செய்வதில் வல்லவர். அவர் இன்னும் மெனக்கெட வேண்டும். கதையின் ஒன் லைன் நன்றாக இருந்தாலும், முழுக்கதையும் சுவாரஸ்யமாக்க பல முயற்சிகள் செய்திருக்க வேண்டும்.

மொத்தமாக அறுவை போடாமல் ஒரு முறை பார்க்கலாம் அருவம்.