Back
Home » திரைவிமர்சனம்
வார் - சினிமா விமர்சனம்
Oneindia | 4th Oct, 2019 10:39 AM

நடிகர்கள்: ஹிருத்திக் ரோஷன்

டைகர் ஷெராப்

வாணி கபூர்

அசுதோஷ் ராணா,

அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன்

இயக்கம் : சித்தார்த் ஆனந்த்

ஒளிப்பதிவு : பெஞ்சமின் ஜாஸ்பரின்

இசை : விஷால் தத்லானி

சென்னை: வார் ஹிருத்திக் ரோஷன் டைகர் ஷெராப் நடித்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம். தமிழில் பெரிய புரமோஷன் ஏதும் இல்லாமல் சைலன்ட்டாக ரீலிஸாகிருக்கிறது. ராணுவ சீக்ரெட் ஏஜென்சியில் வேலை செய்யும் ஹிருத்திக் மற்றும் டைகர் ஒரு நேரத்தில் அந்த வேலைக்கு எதிராக செயல் பட தொடங்கும் ஹிருத்திக் பலரையும் கொல்கிறார். அவரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது அந்த வேலை டைகர் ஷெராப்க்கு வருகிறது அவர் ஏன் இப்படி செய்தார் டைகர் எப்படி அவரை பிடித்தார் இருதியில் என்ன என்பதே வார் படத்தின் கதை.

டைகர் ஷெரிப் தந்தை ராணுவத்தில் இருந்தபோது நாட்டுக்கு செய்த துரோகத்தால் இவர் குடும்பம் அவப்பெயருக்கு ஆளாகிறது. இதனை போக்க ராணுவத்தின் ரகசிய உளவுத்துறையில் இணைந்து தனது குடும்பத்தின் மீதுள்ள அவப்பெயரை நீக்கவும் நாட்டின் பாதுகாப்பை காக்கவும் துடிப்போடு இருக்கிறார் டைகர் ஷெரிப். இவரை பல சோதனைக்கு பிறகு டீமில் இணைத்து அவருக்கு சிறப்பான பயிற்சி தருகிறார் ஹிரித்திக் ரோஷன்.

ஒரு கட்டத்தில் ஒரு பயங்கரவாதியை பிடிப்பதற்கான பணியில் இருந்த போது நாயகியை சந்திக்கிறார் ஹிரித்திக் ரோஷன். நாயகி வாணி கபூர் திருமணமாகி கணவனை பிரிந்து தனது 6 வயது மகளுக்காக வெளிநாட்டில் பணிபுரிகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது பணிக்காக நாயகியை பயன்படுத்துகிறார். அப்போது நாயகி பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்.

இதனால் மனவேதனை அடையும் ஹிரித்திக் ரோஷன் இந்த சம்பவத்தில் நாட்டை காக்ககூடிய அதிகாரிகளே நாட்டை காட்டி கொடுக்கிறார்கள் என்பதை உணர்கிறார். இம்மாதிரியான தேச துரோகிகளை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் முயற்சியில் இறங்குகிறார் ஹிரித்திக். இதனை அறிந்த பிற அதிகாரிகள் ஹிரித்திக் ரோஷனை தேச துரோகி என முடிவு செய்து அவரை கொல்வதற்கு டைகர் ஷெரிப்பை அனுப்புகிறார்கள். இறுதியில் உண்மை நிலவரம் டைகர் ஷெரிப்புக்கு தெரிய வந்ததா? எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து ஹிரித்திக் ரோஷன் தப்பித்தாரா? என்பதே மீதிக்கதை.

இந்திய ராணுவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் சித்தார்த் ஆனந்த். ஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷால் தத்லானியின் பின்னணி இசை மிரட்டல் ரகம்.

ஹிரித்திக் மற்றும் டைகர் இருவருமே திரையில் கனகட்சிதமாக அந்த கதாபாத்திரமாக பொருந்தி விட்டனர் . ஹிரித்திக் ரோஷன், ஆக்‌ஷன், டான்ஸ், செண்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ஹிரித்திக் ரோஷனுக்கு இணையாக டைகர் ஷெரிப்பும் தனது பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் இருவேறு கதாபாத்திரங்களாக வந்து இரண்டிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி வாணி கபூர் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மேலும் அசுதோஷ் ராணா, அனில் ஜார்ஜ், அனு பிரியா, கீத் டல்லிசன் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹிரித்திக்கின் தூம்2 மற்றும் க்ரிஷ் சீரிஸ் படங்களைப் பார்த்தே தமிழகத்தில் அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது அதிலிருந்தே அவரது படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இடையில் அவரது படமான மொகஞ்சதாரோ தோல்விக்கு பின் அவர் படங்களில் சற்று சரிவான ஒப்பனிங்கே கிடைத்து வந்த நிலையில் அவரின் கடைசி படமான சூப்பர்30 மிக பெரிய வெற்றி அடைய வார் படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது, ஆனாலும் சரியான புரோமோஷன் தமிழில் இல்லததால் படத்திற்கு தமிழில் நல்ல ஒப்பனிங் கிடைக்கவில்லை .

உலக தரம் வாய்ந்த சண்டைக்காட்சிகள் அதிரடி ஆக்சன்கள் என படம் வேறு வேறு நாட்டிற்கு தாவி கொண்டே இருக்கிறது எங்கேயும் சலிப்பு தட்டாத திரைக்கதை வேகமாய் படத்தை நகர்த்தி செல்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமாய் இருந்தும் சில முகம் சுழிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளை சரியாக படமாக்கி இருந்தால் படம் 100 சதவிகிதம் முழுமை அடைந்து இருக்கும். வார் ஆக்ஷனை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து.