Back
Home » செய்தி
செப்டம்பர் 11 தாக்குதலில் நடந்தது என்ன?.. அறியாத உண்மைகள்.. தெரியாத செய்திகள்
Oneindia | 11th Sep, 2019 06:04 PM

டெல்லி: உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை யாராலும் மறக்க முடியாது.

வாஷிங்டன்னில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது போன்ற மோசமான ஒரு தாக்குதலை இந்த உலகம் சந்தித்ததில்லை. கடந்த 1993-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் வெடிகுண்டு வெடிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

 • 4 பயணிகள் விமானத்தை 19 பயங்கரவாதிகள் கடத்தினர். அதில் இரு விமானங்களை வாஷிங்டன்னில் உள்ள உலக வர்த்தக மையத்தில் மோதச் செய்தனர். மூன்றாவது விமானத்தை ராணுவ தலைமையிடமான பெண்டகனில் மோதினர். 4-ஆவது விமானத்தை வாஷிங்டன் நோக்கி பறக்கவிட்டு பின்னர் பெனிசில்வானியாவில் மோத செய்தனர்.
 • இந்த தாக்குதலுக்கு பின் லேடன் பொறுப்பேற்றார். ஆனால் பின்னர் மறுப்பு தெரிவித்தார். ஜலால்பாத்தில் இருந்து ஒரு வீடியோ கண்டெடுக்கப்பட்டது. அதில் அல்கொய்தாவின் கலெத் அல் ஹார்பியிடம் லேடன் பேசுவது போன்று காட்சிகள் அமைந்துள்ளது. அதில் இந்த தாக்குதல் குறித்து தமக்கு முன்னரே தெரியும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.
 • 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதலை ராம்ஸி பின் அல் ஷிப்புடன் இணைந்து காலித் ஷேக் முகமது தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து கடந்த 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமது கைது செய்யப்பட்டார்.
 • 1996-ஆம் ஆண்டே இது போன்ற ஒரு தாக்குதலை நடத்த வேண்டும் என லேடனிடம் காலித் முகமது முன்வைத்தார். இதையடுத்து இந்த திட்டத்துக்காக ஹம்பர்க்கில் இருந்து முகமது அட்டா, மார்வன் அல் ஷேஹி, ஜியாத் ஜர்ரா, ராம்ஸி பின் அல் ஷிப் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 • கடந்த ஜூலை 26-ஆம் தேதி மன்ஹட்டனில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் காலித் முகமதுவின் வழக்கறிஞர்கள் ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். அதில் செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தில் சவூதி அரேபியாவின் பங்கிற்கு எதிராக சாட்சியம் அளிக்கவே தாம் தீவிரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 • 1999-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையானது வாலிந்த் பின் அட்டாஷ் மற்றும் மிஹ்தாரின் தொலைபேசி அழைப்புகளை கேட்டனர். அப்போது ஏதோ பெரிய விவகாரம் ஒன்று நடக்கபோவதை உணர்ந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்கு அலெக் ஸ்டேஷன் (பின்லேடன் மற்றும் அவரது கூட்டாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பு) எச்சரிக்கை விடுத்தது. எனினும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு எந்த வித தகவலையும் அளிக்கவில்லை.
 • கடந்த ஜூலை 13-ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பு, அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு தகவல் தெரிவிக்க அனுமதி கோரி தனது உயரதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியது. ஆனால் அந்த அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
 • ஆகஸ்ட் மாதம் 6, 2001- மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் கூறுகையில் அமெரிக்காவில் பெரிய தாக்குதலை நடத்த லேடன் திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தது.
 • புலனாய்வுகள் அமைப்புகள் ஒருவருக்கொருவர் தகவலை பரிமாறாதது குறித்து புகார் கூறப்பட்டது.
 • அமெரிக்கா புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் முகமது அட்டா உள்ளிட்டோர்தான் விமானத்தை கடத்தினர் என தெரிவித்தனர். மேலும் அவரது உடைமைகள் போஸ்டன் லோகன் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது.
 • 2001, செப்.27-ஆம் தேதி விமானத்தை கடத்திய 19 பேரின் புகைப்படங்களை புலனாய்வு அமைப்பு வெளியிட்டது. அதில் 15 பேர் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்கள், இருவர் யூஏஇ, ஒருவர் எகிப்து நாட்டினர், இன்னொருவர் லெபனான் நாட்டினர் ஆவர்.
 • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் விமான தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் படித்து காட்டப்படும். மேலும் பெண்டகனின் உள்ள மவுன அஞ்சலி கூட்டத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வது வழக்கம். செப்டம்பர் 11-ஆம் தேதியை அமெரிக்கா தேசபக்தி தினமாக கொண்டாடுகிறது.