Back
Home » திரைத் துளி
முண்டாசுக் கவியின் பாடல்களில் மிளிர்ந்த தமிழ் சினிமா.. கலைஞர்கள்
Oneindia | 11th Sep, 2019 01:50 PM

சென்னை: பாரதியார் என்ற ஒற்றை வார்த்தை - மிக பெரிய வரலாறு சொல்லும் . கவிஞன் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாத மாமேதை.

புரட்சி பொங்க சமுதாயத்தில் மாற்றங்கள் கொண்டு வந்த மிக பெரிய எழுத்தாளன். பாரதியார் உஎழுதிய எத்தனையோ வார்த்தைகளை, வரிகளை - தமிழ் சினிமா உலகம் பயன் படுத்தி கொன்டே தான் இருக்கிறது.

இதுதொடர்பாக கவிஞர் வைரபாரதி எழுதியுள்ள ஒரு கட்டுரை.

மீடியா முண்டாசுக்காரன்--- பாரதியார்

யோவ் பாரதிக்கும் மீடியாவுக்கும் என்னய்யா சம்மந்தம்?

என்று யாராவது கேட்டால் சொல்லுங்கள்..

பாரதி தான் தமிழ் நாட்டில் பத்திரிகை வழி சத்திய சாட்டை எடுத்த முதல் கவிஞன்...

முதன் முதலாக அவன் தான் அதில் கேலிச் சித்திரங்கள் வரைந்து வெள்ளையன் முகத்தில் அந்தி வரவழைத்தவன்...

ஊடகம் வழி நல்ல கருத்துக்களை விதைக்கலாம் என்ற மையப்புள்ளிக்கு புரட்சித் தலைவரின் முன்னோடி நம் புரட்சிக் கவிஞன் பாரதி..

மீடியா என்பது காலக் கண்ணாடி.. சில நேர்மறை கனவுகளும் அதில் உண்டு...அதை அப்படியே பிரதிபலித்தன அவன் கவிதைகளும் .. பத்திரிக்கை எழுத்துக்களும்...

சார்பு என்பது தர்மத்தின் மீதே இருக்க வேண்டும் என்பதை சார்பில்லாமல் சந்திக்கும் சந்ததிக்கும் கொடுத்தவன் பாரதி..

அவனைக் குண்டு கட்டாகத் தூக்கி திரையில் நடமாடவிட்ட முதல் மேதை திரு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள்..

ஒரு பெரிய தொகை கொடுத்து பாரதியின் படைப்புகளை வாங்கி தான் தயாரிக்கும் படங்களில் பயன் படுத்திக் கொண்டார்...

நாம் இருவர் திரைப்படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை குமாரி கமலா ஆட ... பட்டம்மாள் பாட 1947 ல் வெளியான ஏ.வி.எம் நிறுவன திரைப்படம்...

தேசியவாதிகள் நிரம்பி இருந்த திரை உலக பொற்காலம் அது...

பிறகு நம் பாரதியின் படைப்புகளை பொது உடமையாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்த போது இலவசமாகவே அரசாங்கத்திற்குக் கொடுத்துதவினார் ஏ.வி.எம்.

பெரிய மனிதர் அவர்.

பாரதியின் பல பாடல்கள் ஏ.வி.எம் நிறுவனத்தால் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது...

1952ல் வெளியான அந்தமான் கைதி திரைப்படத்தில் "காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்ற பாடலுக்கு புரட்சித் தலைவர் நடித்திருப்பார்...

நடிகர் திலகம் திரு சிவாஜி பாரதியாகவே சிந்து நதியின் மிசை பாடலில் சில விநாடி தோன்றி கண்களை உருட்டுவார்...

பாரதி ஒரு கனாக்காரனும் கூட என்பதற்கு அந்தக் காட்சி சான்று ...

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் பாரதியாகவே வாழ்ந்திருப்பார்

நடிக யோகி எஸ்.வி.சுப்பையா ...

உணர்ச்சிப் பிழம்பாகி இருப்பார்...

என் வரையில் சாயாஜி ஷிண்டேவை விட ஒரு பத்து மதிப்பெண் அதிகமாக அவருக்கே அளிப்பேன்...

பாரதி தின்று பெருத்த உடல் வாகல்ல...

இதயத்தில் தீப்பொறி ஏந்திய திரி தேகம் தான்..

திரு சுப்பையா மிகப் பொருந்தி இருந்தார் ...

இருவருக்கும் உள்ள ஆச்சர்யமான ஒற்றுமை இருவருமே காளியை வழிபட்டவர்கள்...

சாக்தர்களின் வெளிப்பாட்டு நிலையை துல்லியமாகக் காட்டியிருந்தார்...

நெஞ்சில் உரமுமின்றி என்ற பாடல் கப்பலோட்டிய தமிழனில் இடம் பெறும் ...

மெட்டில் உருக்கி இருப்பார் இசை மகா ஞானி ஜி.ராமநாதன்...

வாய்ச் சொல்லில் வீரரடி என்ற வரியில் இன்றைய அரசியல்வாதிகளை அன்றே படம் பிடித்திருக்கிறான் நம் பாரதி.

அந்தப் படமே பாரதிக்கு சிங்கில் டைட்டில் கார்ட்

பெரிய தேசியவாதி நம் பாரதி. அவன் தேசத்தை பழித்ததே இல்லை ...

வறுமை தலை விரித்து அவன் குடும்பத்தில் ஆடியது ஆனாலும் அவன் தெய்வத்தைப் பழித்ததே இல்லை ...

அவன் அல்லாவுக்கும் பாடல் எழுதியிருக்கிறான்...

அவன் தான் நிஜமான பாடலாசிரியன்...

காரணம் அவன் மகா கவி என்பதால் தான் பெரிய பாட்டைப் பாடினானே தவிற பஞ்சப் பாட்டைப் பாடியதே இல்லை ....

சிந்து நதியின் மிசை பாடலில் பாட்டிசைத்து என்ற பல்லவி வரியை மாற்றச் சொல்லி இருக்கிறார் மெல்லிசை மன்னர் ..

யோவ் எதுக்குயா? இது கவியரசர் ...

பாட்டிசைத்துனு பாடினா பாட்டி செத்துனு வருது கவிஞரே ... நீங்களே மாத்திக் கொடுத்துருங்க...

சரியா போச்சு அது பாரதியார் பாட்டுய்யா இது கவியரசர்

மன்னரோ மெட்டை உள்வாங்கிய படி கவனிக்காமல்

"யாரா இருந்தாலும் வரிய மாத்த சொல்லிடுங்க... இது மன்னர்

டேய் விசு.. கண்ண தொறந்து பாரு..

என்ன கவிஞரே ?

நம்ம மகா கவி சுப்ரமண்ய பாரதியோட பாட்டுயா இது

என்றவுடன்

ஓ அவரா என்று கன்னத்தில் போட்டு பய பக்தியுடன்

அப்ப அப்படியே இருக்கட்டும்

ஒன்றா இரண்டா மெல்லிசை மன்னர் எத்தனை பாரதி வரிகளை பரிகளாக்கி இதய வீதியில் ஓடவிட்டிருக்கிறார் ...

ஒரு பாரதி பாடலை திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்ய ஏற்கனவே பேசி வைத்திருந்த பெரிய பாடகியை வேண்டாமென்று இன்னொரு பாடகிக்கு வாய்ப்பளித்தார் ..

அது என்ன பாரதி பாடல்..?

யார் அந்த பாடகி ?

பாரதி தொடர்வான் ...