Back
Home » ஆரோக்கியம்
இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா?
Boldsky | 21st Aug, 2019 01:30 PM
 • ஊட்டச்சத்து மதிப்பு

  இந்த பழத்தில் நீர்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. 100 கிராம் காமு காமுவில் 94.1 கிராம் நீர், 0.4 கிராம் புரதம், 0.44 கிராம் ஸ்டார்ச், 0.2 கிராம் கொழுப்பு, 0.2 மி.கி செம்பு, 0.53 மி.கி இரும்பு மற்றும் 0.2 மி.கி துத்தநாகம் உள்ளது. பழத்தில் உள்ள மீதமுள்ள ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு

  5.9 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்
  1.1 கிராம் உணவு நார்ச்சத்து
  15.7 மிகி கால்சியம்
  12.4 மிகி மெக்னீசியம்
  2.1 மி.கி மாங்கனீசு
  83.9 மிகி பொட்டாசியம்
  11.1 மிகி சோடியம்
  1882-2280 மிகி வைட்டமின் சி

  MOST READ: வெங்காயத்தாள் சாப்பிடலாமா கூடாதா?... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்?


 • காமு காமுவின் பயன்கள்

  பழத்தின் அதிகப்படியான சுவை காரணமாக காமு காமு, ஐஸ்கிரீம்கள் மற்றும் இனிப்புகளில் பரவலாக இவை பயன்படுத்தப்படுகின்றன.

  இது தவிர, இந்தப் பழம் அதன் உலர்ந்த வடிவத்திலும் பயன்படுத்தப்படுகிறது, இது தூள் செய்யப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு உணவு நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது


 • கல்லீரல் ஆரோக்கியம்

  ஆய்வுகளின்படி, காமு காமுவில் 1-மெத்தில் மெலேட் எனப்படும் ஒரு கலவை உள்ளது, இது ஒருவரின் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கல்லீரல் தொடர்பான காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த கலவை நன்மை பயக்கும்.


 • அறிவாற்றல் திறனை மேம்படுத்த

  சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற தடுப்புத் திறன்களைக் கொண்டிருத்தல் மற்றும் பழத்தில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம் போன்றவை நமது அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதில் மிகவும் பயனளிக்கிறது. அறிவாற்றல் பாதைகளில் ப்ரீ ரேடிக்கல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் பிளேக் கட்டமைப்பை அகற்றுவதில் அந்தோசயின்கள் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளிட்ட ஃபிளாவனாய்டு அன்டி ஆக்சிடென்ட்கள் உதவுகின்றன. இவை அறிவாற்றல் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றன.

  MOST READ: ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...


 • எடை இழப்புக்கு உதவ

  எடை இழப்புக்கு காமு காமு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை பராமரிக்க உதவும் பழத்தின் திறன், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, எனவே, அந்த கூடுதல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, உடல் பருமனுடன் இணைந்திருக்கும் நாள்பட்ட நோய்களின் வரம்பைக் கட்டுப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது.


 • மனநிலை மாற்றங்களை நிர்வகிக்க

  காமு காமு மயக்க மருந்துகளைக் கொண்டுள்ளது, இது நிதானத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்வது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், மனக் கவலை மற்றும் மனநிலை மாற்றங்களைக் குறைக்க இந்தப் பழம் நன்மை பயக்கும். சில ஆய்வுகள் உங்கள் உடலை அமைதிப்படுத்த உதவும் மெக்னீசியம் மற்றும் பிற வைட்டமின்கள் இருப்பதால் இருக்கலாம் என்று கூறுகின்றன.


 • தசைகளுக்கு வலிமை அளிக்க

  பழத்தில் உள்ள ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்களின் மிகுதியானது தசைகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. பழப் பொடியின் வழக்கமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வு உங்கள் தசையின் வலிமையை அதிகரிக்க உதவும், இது உங்கள் உடற் பயிற்சி அமர்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும்


 • காமு காமு, பீட்ரூட் மற்றும் குருதி நெல்லி ஸ்மூத்தி

  தேவையான பொருட்கள்

  . 1 சிறியது முதல் நடுத்தர அளவு பீட்ரூட், தோல் உரிக்கப்பட்டு நறுக்கியது
  . 1 உறைந்த வாழைப்பழம்
  . ½ வெண்ணெய்ப் பழம்
  . 1 கப் உறைந்த குருதி நெல்லி அல்லது அவுரிநெல்லிகள்
  . 3-4 பேரிச்சை
  . 2 டீஸ்பூன் காமு காமு தூள்
  . 1-1 ½ கப் பாதாம் பால்

  செய்முறை

  . மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து க்ரீம் போல் செய்து கொள்ளவும்.
  . உங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த ஸ்மூதியை அலங்கரித்துப் பருகலாம்.

  MOST READ: பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்


 • பக்க விளைவுகள்

  . பழத்தின் சாத்தியமான பக்க விளைவுகள் அதன் உயர் வைட்டமின் சி உள்ளடக்கத்துடன் தொடர்புடையவை.
  . பழத்தை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
  . ஹீமோக்ரோமாடோசிஸ் (மிக அதிக இரும்பு சத்து ) நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக மைர்சியா டூபியா என்று அழைக்கப்படும் பழம் காமு காமு, ககாரி அல்லது கேமோகாமோ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. காமு காமு, ரம் பெர்ரி மற்றும் பிரேசிலிய திராட்சை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு புதர் மரம் ஆகும். வைட்டமின் "சி"யின் மிகப்பெரிய ஆதாரமாக அழைக்கப்படும் இந்த பழத்தில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தை விட 30 முதல் 60 சதவீதம் வரை வைட்டமின் சி அதிகம் உள்ளது.

தோற்றத்தில் செர்ரி பழங்களைப் போலவே இருக்கும் காமு காமு பழத்தின் சுவை செர்ரி பழங்களைப் போல் இருக்காது. காமு காமு ஒரு லேசான அமில-புளிப்பு சுவை கொண்டது மற்றும் சமீபத்திய காலங்களில் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. செர்ரி போன்ற இந்த பழத்தில் ஊட்டச்சத்து நன்மைகள் ஏராளமாக இருப்பதால், இது அமேசான்களில் ஒரு மருந்தாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது