Back
Home » ஆரோக்கியம்
இயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
Boldsky | 13th Aug, 2019 04:21 PM
 • இயற்கை உணவுகள் என்றால் என்ன?

  இயற்கை உணவுகள் என்பது தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் பயிர்களைக் குறிக்கிறது. கரிம வேளாண்மையின் கீழ் உள்ள விலங்குகள் கூட செயற்கை வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத கரிம விநியோகத்துடன் உணவளிக்கப்படுகின்றன. இப்போது இயற்கை உணவுகளுக்கு என பல சிறப்பு கடைகளை நாம் பார்க்கலாம்.


 • இரசாயனங்கள் இல்லை

  வழக்கமான விவசாயத்தைப் போலல்லாமல், கரிம விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு செயற்கை உரங்கள், ரசாயன சேர்க்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். எனவே, நீங்கள் உண்ணும் உணவில் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பது இல்லை. மேலும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இதில் இருப்பதில்லை.


 • சுற்றுசூழலுக்கு நல்லது

  இயற்கை வேளாண்மை என்பது நமது மோசமடைந்து வரும் சூழலுக்கு ஒரு வரமாகும். பயிரின் அளவை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்பதால் இது மண் மற்றும் சுற்றுசூழலுக்கு நல்லது. இது நமது எதிர்கால தேவைக்கான தண்ணீரை சேமிக்கிறது. கரிம பண்ணைகளில், பயிர்களின் பன்முகத்தன்மை அதிகரித்துள்ளது.


 • உயர் ஊட்டச்சத்து மதிப்புகள்

  வழக்கமான விவசாயத்துடன் ஒப்பிடுகையில் இயற்கை உணவு பொருட்களில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கை வேளாண்மை மண்ணின் ஆற்றலையும், பலன்களையும் அதிகரிக்கிறது. இந்த உணவுகளை சாப்பிடும்போது இந்த நன்மைகள் நம் உடலுக்கும் கிடைக்கிறது.

  MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...!


 • சிறந்த சுவை

  இயற்கை வேளாண்மையில் உருவான பயிர்கள் உணவின் சுவையை பலமடங்கு அதிகரிக்கிறது. உணவின் சுவையானது அதிலிருக்கும் சர்க்கரை அளவுடன் தொடர்புடையது ஆகும். ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பது மட்டுமின்றி இயற்கை வேளாண் பொருட்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கிறது.


 • ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு இல்லை

  இயற்கை உணவு சாப்பிடுபவர்கள் இதய நோயை பற்றி பயம் கொள்ளவே தேவையில்லை. ஏனெனில் இயற்கை உணவுகளில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு சுத்தமாக இல்லை. இதனால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறைகிறது. பரபரப்பான வாழ்க்கை அட்டவணைகளின் சவால்களை எளிதில் எடுத்துக்கொள்ள இது உங்களை தயார் செய்கிறது.

  MOST READ: இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...!


 • கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்லது

  ஆராய்ச்சிகளின் படி வழக்கமான உணவுகளில் இருக்கும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்றவற்றில் இருக்கும் இரசாயனங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதிக்கும் வண்ணம் நஞ்சுக்கொடியை கடந்து செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த் நச்சுக்கள் குழந்தைகளுக்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். குறைவான எடையில் குழந்தை பிறப்பது, ஆட்டிசம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இரசாயனங்களும் முக்கிய காரணமாகும். இயற்கை வேளாண்மை உணவில் இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.


 • அதிக விலை

  இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சலுக்காக செயற்கை உரங்கள் சேர்க்கப்படுவதில்லை. எனவே இதில் விளைபொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் இவற்றின் விலை பொதுவாக அதிகமாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்திற்காக சிறிது அதிக பணம் செலவழிப்பது தவறில்லை.


 • விரைவில் கெட்டுவிடும்

  இயற்கை உணவுப்பொருட்களில் இருக்கும் முக்கியமான பிரச்சினை இதுதான். கரிம உணவு செயற்கை பாதுகாப்புகள் அல்லது கதிர்வீச்சு இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. எனவே, அவை பதப்படுத்தப்பட்ட கரிமமற்ற உணவை விட வேகமாக கெட்டுப்போகின்றன.

  MOST READ: இளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா?


 • ஈ- கோலி பாக்டீரியா

  விலங்குகளின் குடலில் காணப்படும் இந்த பாக்டீரியா மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகும். கரிம உணவு கூட அதனால் ஏற்படும் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கிறது. நம் முன்னோர்களின் உணவு முறைக்கும், நம்முடைய உணவு முறைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் பெரும்பாலும் இயற்கை உணவுகளையே தங்களின் பிரதான உணவாக கொண்டிருந்தனர் அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இப்போது நமது தலைமுறையும் இயற்கை உணவுகளை நோக்கி திரும்பி கொண்டிருக்கிறது. பொதுவாக இயற்கை உணவுகளால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து உள்ளது. அது உண்மையாக இருந்தாலும் அதில் சில சிறிய பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது. இயற்கை உணவுகளால் கிடைக்கும் நன்மைகளை ஒப்பிடும்போது அதன் பாதிப்புகள் மிகவும் குறைவுதான். இந்த பதிவில் இயற்கை உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.