Back
Home » ஆரோக்கியம்
தூக்கத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் உங்கள் முதுகெலும்பை கடுமையாக பாதிக்கும் தெரியுமா?
Boldsky | 9th Aug, 2019 05:50 PM
 • கருவில் இருக்கும் நிலையில் தூங்குவது

  இந்த நிலையில் தூங்குவது உங்களின் முதுகெலும்பை வளைக்கும். இதனால் உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம். ஒழுங்காக சீரமைக்கப்பட்ட நிலைக்கு உங்கள் கை மற்றும் முழங்கால்களின் கீழ் தலையணைகளை வைப்பதன் மூலம் உங்கள் முதுகெலும்பை பாதுகாக்கலாம்.


 • செல்லப் பிராணியுடன் தூங்குவது

  செல்லப்பிராணிகளுடன் தூங்கியவர்களில் பலரும் தூக்கத்தின் தரம் குறைவாக இருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. விலங்குகள் மனிதர்களை விட வித்தியாசமான தூக்கப் பழக்கத்தைக் கொண்டுள்ளன மேலும் அவை அடிக்கடி உங்களை எழுப்பக்கூடும்.


 • வயிற்றை அழுத்தி தூங்குவது

  உங்கள் வயிற்றை அழுத்தி தூங்குவதால் உங்கள் முதுகெலும்பு முறுக்குகிறது மற்றும் உங்கள் கீழ் முதுகுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில்லை. இதனால் கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

  MOST READ: எச்சரிக்கை! இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...!


 • மென்மையான தலையணைகளை உபயோகிப்பது

  தூங்கும் போது உடலை சரியான நிலையில் வைக்க வேண்டியது அவசியம். மிகவும் மென்மையாக இருக்கும் தலையணையைப் பயன்படுத்துவது நாள்பட்ட கழுத்து வலியை ஏற்படுத்தும், ஏனெனில் இதனால் முதுகெலும்பிற்கு போதுமான ஆறுதல் கிடைக்காது.


 • சீரான படுக்கை நேரம் இன்மை

  தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது உங்கள் உள் கடிகாரத்தை சீராக இயங்க வைக்கிறது. வெவ்வேறு தூக்க நேரங்களைக் கொண்டிருப்பது, குறிப்பாக வார இறுதி நாட்களில் வெவ்வேறு நேரத்தில் தூங்குவது உங்களின் கட்டுப்பாடான நாள்சுழற்சியை பாதித்து உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.


 • திரைச்சீலைகள் இல்லாமல் தூங்குவது

  அறைக்குள் வரும் எந்த வெளிச்சமும் உங்கள் உடலின் சுழற்சியை பாதிக்கும். அறைக்குள் வெளிச்சம் வருவது உங்கள் உடலில் மேலோட்டனின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும். அறையில் திரைச்சீலையுடன் தூங்குவது உங்களை இந்த பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும்.

  MOST READ: இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க


 • அதிகமாக தூங்குவது

  ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடலாம், ஆனால் பொதுவாக 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது உங்களுக்கு நல்லதல்ல. இவ்வாறு தூங்குவது உங்களை நாள் முழுவதும் சோர்வாக உணர வைக்கும்.


 • பழைய மெத்தைகளில் தூங்குவது

  உங்கள் உடலை ஆதரிக்கும் தரமான, நல்ல மெத்தையில் தூங்க வேண்டியது அவசியமானதாகும். மெத்தையின் தரத்தை பொறுத்து ஐந்து அல்லது பத்து வருடத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும். இரவில் முதுகு வலி ஏற்படுவது, அதிகம் நசுக்குவது போன்றவை உங்கள் மெத்தையை மாற்ற வேண்டியதற்கான அறிகுறி ஆகும்.


 • மென்மையான மெத்தைகளில் தூங்குவது

  மிகவும் மென்மையான மெத்தைகளில் தூங்குவது உங்களுக்கு நாள்பட்ட முதுகு வலியை ஏற்படுத்தும்.ஒரு மெத்தை உங்கள் முழு உடலையும் ஆதரிக்கும் அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும், இதனால் உங்கள் முதுகெலும்பு சரியாக சீரமைக்கப்படும்.

  MOST READ: பாண்டவர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்ள அவர்கள் செய்த பாவம் என்ன தெரியுமா?


 • நிறைய சாப்பிட்டுவிட்டு தூங்குவது

  தூங்க செல்வதற்கு முன் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு செல்வது உங்களின் தூக்கத்தை மேலும் சிரமமானதாக்கும். இரவு உணவிற்கு பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துதான் தூங்கச்செல்ல வேண்டும். இல்லையெனில்,நெஞ்செரிச்சல், அமிலத்துவம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
அனைவருக்குமே அவசியமான மற்றும் பிடித்தமான ஒரு செயல் என்றால் அது தூக்கம்தான். நாள் முழுவதும் செய்த வேலைக்கு ஓய்வையும், அடுத்த நாள் வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்கும் தூக்கத்தை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் தூக்கமே உங்களுக்கு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உண்மைதான், தூங்கும்போது நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். சில தவறுகள் கடுமையான விளைவுகளை கூட ஏற்படுத்தும். இந்த பதிவில் தூங்கும்போது நீங்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.