Back
Home » வீடு-தோட்டம்
தானியங்கி / கேரேஜ் கதவுகள் அடிக்கடி பழுதாகிறதா? இது தான் காரணம்
Boldsky | 20th Jul, 2019 05:19 PM
 • வீட்டுக்கு வீடு வாசப்படி

  நமது வீடாகட்டும் அலுவலகமாகட்டும் கதவு என்பது இன்றியமையாததாகி விடுகிறது வீட்டிற்கு செல்லவேண்டுமானாலும் வெளியே செல்ல வேண்டுமானாலும் கதவைத் திறந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது. மிக முக்கியமாக பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் கதவுகள் சீக்கிரம் வீணாவதை நாம் ஒரு போதும் விரும்பமாட்டோம். அது போன்ற சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்காகத் தான் சகல வசதிகளுடன் கூடிய தானியங்கி கதவுகளை நாம் பயன்படுத்துகிறோம்.

  அலுவலகங்களில்,

  வெளியாட்கள் உள் நுழைவதை ஒருபோதும் விரும்பாதவர்களும், தங்கள் பணியாளர்களின் வருகையை கண்காணிக்கவும் சென்சார் தானியங்கி கதவுகளை பயன்படுத்துகின்றனர். அக்சஸ் உள்ளவர்கள் மட்டுமே இங்கு உள்ளே நுழையவும் முடியும் வெளியே செல்லவும் முடியும்.

  ஆனால் இது பல சமயங்களில் சரியாக வேலை செய்வதில்லை. அலுவலகத்தில் உள்நுழையும் போதே இந்த கதவுகளோடு மார் கட்ட வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் அனறைய நாள் ரொம்ப அருமையாகத் தான் இருக்கும். உங்கள் கோபத்தின் எல்லையை அவ்வப்போது சீண்டிப்பார்க்கும்.

  Most Read : முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்


 • காரணம் என்ன:

  கண்களை உணரும் சென்சார்
  பவர் செல்வதில் சிக்கல்
  டாரிசன் ஸ்பிரிங் உடைதல்
  ரிமோட் கண்ட்ரோலில் கோளாறு
  பாதிப்படைந்த கேபிள்கள்
  சென்சாரில் பிரச்சினை
  வர்ம்பு செய்யப்பட்ட பகுதிகள் அணைத்து வைக்கப்படுதல்
  கதவு அதன் பாதையிலிருந்து விலகுதல்
  கதவிற்கு இடையில் ஏதாவது பொருள் சிக்கியிருத்தல்
  கதவு தானியங்கி கருவியுடன் துண்டிக்கப்படல்
  கதவு பூட்டப்படிருந்தல்
  போன்ற 11 காரணங்களால் கரேஜ் கதவுகளைப் பயன்படுத்தும் போது அசௌகரியத்தை உணர்ந்திருப்பீர்கள். அதற்கான காரண கர்த்தாவையும் ஒன்றன்பின் ஒன்றாக காணலாம்.


 • கண்களை உணரும் சென்சார்

  பொதுவாக தானியங்கி கதவுகளில் கண்களை உணரும் சென்சார் கடந்த 15-20 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தரையிலிருந்து 4 முதல் 6 அங்குல நீளத்தில் பொறுத்தப்படுகிறது. உங்கள் கண்களை ஸ்கேன் செய்யும் போது ஏதேனும் அலைகள் குறுக்கிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதே போல் மழைக்காலங்களில் கதவின் மீது படுகிற தண்ணீர், தூசு போன்றவையும் கதவுகளைத் திறக்க விடாமல் இருப்பதற்கான காரணமாகும் டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைத்துவிட்டு இப்போது கண்ணை ஸ்கேன் செய்யுங்கள்.

  Most Read :காபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா? சிக்கரி அதிகமா இருக்கணுமா?


 • பவர் செல்வதில் சிக்கல்

  மழைக் காலங்கள் அல்லது அசாதரண சூழல்களில் பவர் சப்ளை ஒழுங்காக இருக்காது அந்த மாதிரி சூழலில் உங்கள் வீடு அல்லது அலுவலகம் முழுவதும் இருக்கிறதா என்று பாருங்கள் அப்படி இல்லை என்றால் எலெக்ட்ரீசனை அழைத்து அதைச் சரி செய்யுங்கள். உங்கள் சுற்றத்தாரும் அதே பிரச்சினையை சந்திக்கிறார் எனில் மாற்று ஏற்பாடைச் செய்யுங்கள். உதாரணமாக யுபிஎஸ் மாற்று மின்சக்திக்கான மூலத்தை ஏற்படுத்துங்கள்.


 • டாரிசன சுருள்கள்

  இந்தவகை கதவுகளில் டாரிசன் வகை சுருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சுருள்கள் தான் கதவு வேகமாக இயங்கி உராய்வு ஏற்படுவதிலிருந்து கணிசமான அளவு குறைக்கிறது. இந்தச் சுருள்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் போது தொய்வைச் சந்திக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு வித சத்தத்தையும் இது பழுதுபடும்போது ஏற்படுத்துகிறது. இது நழுவும் போது கதவு கீழே சரிவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கும். இது தொய்ந்து போய்விட்டது என்பதை எளிதாக உணரலாம். எனவே பழுதாகும் போது விரைந்து மாற்றுவது உங்களது சுமையைக் குறைக்கும்.

  6 கேபிள்களில் பழுது
  டாரிசன் சுருள்கள் பழுதுபடும்போது கேபிள்களின் பணி அதிகமாகிறது. அப்படி அதிகமாகும் போது கேபிள்கள் பிய்ந்து போவது போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகும். அப்படிப்பட்ட சூழலில் மிகப்பெரிய சேதத்தை அது நிச்சயம் ஏற்படுத்தும் எனவே அதை நீங்கள் உணரும் போது இது குறித்து விசயம் தெர்ந்த பொறியாளர்களை உடனடியாக விரைந்து சரிசெய்ய வேண்டும்.

  சென்சிட்டிவிட்டி:
  இந்த பிரச்சினை புதிதாக இன்ஸ்டால் செய்யப்பட்ட கதவுகளுக்கோ, அல்லது பழைய கதவுகளுக்கோ தான் ஏற்படுகிறது. இதனால் கதவுகளை கட்டாயம் திறக்க முடியாது. குறைந்த சென்சார் உணர் திறனோ அல்லது அதிக சென்சார் உணர் திறனோ தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்சார் இயக்கப் பதிவேட்டில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி சென்சார் உணர்திறனை மாற்றியமைத்தால் நிச்சயம் இந்தப் பிரச்சினைக் கட்டுக்குள் வரும் தொடர்ச்சியாக வருமானால் சென்சாரை மாற்றியமைக்கமலாம்.

  Most Read :செரிமானமே ஆக மாட்டேங்குதா.. விரல்களாலே முத்திரைகள் செய்து தீர்வு காணலாம்


 • ரிமோட் கண்ட்ரோல்:

  நீங்கள் சென்சாருக்கு உங்களுடைய ரிமோட் கண்ட்ரோல் டிவைஸ்கும் இருக்கும் தூரத்தைக் கடந்திருக்கலாம், சென்சாரை உணரும் ஆண்டனாவில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம், பேட்டரி ரிமோட் கண்ட்ரோல் ஸ்விட்சில் பேட்டரி மாற்றம் செய்யாமல் இருந்தால் மாற்றலாம். இதில் சரியாகவில்லை என்றால் புரோகிராமில் மாற்றங்களைச் செய்யவும்.

  இதுமட்டுமல்லாமல் கதவை நீங்கள் பூட்டியிருந்தால் அல்லது கதவிற்கு செல்லும் பவர் சப்ளையை துண்டித்து இருந்தால் போன்ற புறக்காரணங்களாலும் தானியங்கி கதவுகள் செயல்படாமல் போகலாம்.
தானியங்கி சாதனங்களின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படி அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக அது மாறிப் போகிற சூழலில் என்றாவது ஒரு நாள் கோளாறு கொடுக்கும் போது அது நமக்கு பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது.

அதன் தாக்கம் குழந்தைகள் மீதிலிருந்து அலுவலகம் வரை அன்றைய நாளையே மோசமானதாக மாற்றி விடுகிறது.