Back
Home » பயணம்
யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Native Planet | 16th Jul, 2019 03:49 PM

யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற ஹரியானா நகரங்களில் ஒன்று. மேலும் இது யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. விரைவான நகரமயமாக்கல் காரணமாக யமுனா நகர் மிக சமீபத்தில் மாசுபாடு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நகரத்தின் கிழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்புர் உள்ளது.

Nitish Mahadev

இந்த நகரத்தின் வட எல்லையில் மலைகள் காணப்படுகின்றன. அந்த மலைகளில் காடுகள் மற்றும் நீரோடைகள் மிகுந்து காணப்படுகின்றன. இந்தப் புள்ளியில், யமுனா நதி மலையில் இருந்து சமவெளி நோக்கிப் பாய்கிறது. யமுனா நகர் இமாச்சல பிரதேசத்தின் ஸிர்மொர் உடன் வடக்கு எல்லையை பகிர்ந்துகொள்கிறது. அம்பாலா குருஷேத்ரா மற்றும் கர்னல் போன்றவை மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளாக உள்ளன. இந்திய வரலாற்றில் யமுனா நகர் அதன் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. இது 1947ம் ஆண்டின் இந்தியப் பிரிவினையின் பொழுது அகதிகளுக்கு புகலிடமாக இருந்தது. யமுனா நகர் இதற்கு முன்னர் அப்துல்லாநகர் என அழைக்கப்பட்டது, மேலும் அப்பொழுது சுமார் 6000 மக்கள் வசித்து வந்தனர். தொல்லியல் துறையின் ஆய்வுகளின் மூலம் ஹரப்பா நாகரிகத்தின் கற்கள் மற்றும் செங்கற்கள் ஹரியானாவில் உள்ள இந்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

யமுனா நகர் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்

யமுனா நகர் ஷிவாலிக் ஹில்ஸ் என்னும் கண்ணுக்கினிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. யமுனா நதியின் அற்புதமான அழகு மலைகளின் கண்ணுக்கினிய காட்சியுடன் இணைந்து காண்பவரின் மனதை மயக்குகிறது. சாம்பல் பெலிகன் என்கிற கெஸ்ட் ஹவுஸ் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கெஸ்ட் ஹவுஸ் ஹரியான மாநில அரசால் நிர்வகிக்கப்படுகிறது. கலெஸர் வனவிலங்கு சரணாலயம் யமுனா நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் வன விலங்குகள் தவிர, க்ஹர், ஸ்ஹிஸம், டுன், ஸைன், மற்றும் நெல்லி மரங்கள் காணப்படுகின்றன. சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்காவில் மருத்துவ குணமுள்ள தாவரங்கள் செழித்து வளர்கின்றன். பிலாஸ்பூர் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது வேத வியாஸரின் பெயரால் அழைக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் கபல்மோச்சன், ரின்மோச்சன் மற்றும் சூர்யா குந்த் போன்ற புனித குளங்கள் காணப்படுகின்றன. அடிபாரி இயற்கை அழகின் உறைவிடமாக விளங்குகிறது. தொல்பொருட்கள் இந்த இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

Gagandeep2065

முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகள்

ஹிந்தி, பஞ்சாபி மற்றும் பாங்ரு மொழிகள் யமுனா நகரில் பெருவாரியாக பேசப்படுகின்றன. இந்த நகரம் ஹரியானா மாநிலம் முழுவதற்கும் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளில் முன்னணியில் திகழ்கிறது. மேலும் யமுனா நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. இங்கு புனித தலங்களான பல்வேறு கோயில்கள் மற்றும் குருத்துவாராக்கள் அமையப்பெற்றிருக்கின்றன. யமுனாநகர் முழுவதும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்து உள்ளன. இந்த நகரம் சீன பெரு நிலத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கு தொழில்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து குடியேறியவர்களால் இந்த நகரம் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் காரணமாக இந்த நகரத்தின் கலாச்சார பன்முகத்தன்மையும், யமுனா நகரின் கிராமப் பகுதிகளின் முகமும் கூட மாறி விட்டது. இந்த மக்களின் மிக முக்கியமான தொழிலாக வர்த்தகம் அறியப்படுகிறது.

சர்க்கரை, காகிதம் மற்றும் பெட்ரோலிய உப பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தை தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே வேகன் மற்றும் கோச்களின் பழுது பட்டறைகள் இங்கு அமைந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய காகித மற்றும் சர்க்கரை ஆலை மற்றும் மரத் தொழில் ஆகியவை இவ்விடத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம். விவசாயமும் இங்கு நடைமுறையில் உள்ளது. இங்குள்ள செழுமையான நீர் வளம் மற்றும் வளமான மண் போன்றவை கரும்பு, நெல், கோதுமை மற்றும் பூண்டு சாகுபடிக்கு உதவுகிறது. பொப்லர் மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற விவசாயக் காடுகள் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானத்தை தருகின்றன.

யமுனா நகருக்கு சுற்றுலா வருவதற்கு சிறந்த பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலகட்டமே யமுனா நகரை சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த பருவமாகும்.

யமுனா நகரை எவ்வாறு அடைவது?

யமுனா நகர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகருக்கு அருகில் சண்டிகர் விமான நிலையம் உள்ளது.